பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை? 9 days off for Pongal festival? - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 29 December 2024

பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை? 9 days off for Pongal festival?



பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை? 9 days off for Pongal festival?

அரசு விடுமுறை அளித்தால் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. போகி பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதாவது பொங்கல் முந்தைய நாள் போகி பண்டிகை ஜனவரி 13ம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. ஆகையால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

அப்படி விடுமுறை அளிக்காத பட்சத்தில் போகி பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அறிவித்தால் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 9 அல்லது 6 நாட்கள் விடுமுறை கிடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் இப்போதே குஷியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைந்த நிலையில் மீண்டும் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here