பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை ஆய்வு செய்வதா ? – ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி ! - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, 5 December 2024

பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை ஆய்வு செய்வதா ? – ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி !

Responsive Ads Here
449


பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை ஆய்வு செய்வதா ? – ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி !

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 2ஆம் தேதி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தாங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை பெற்றுள்ளீர்கள்!… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்துள்ளார்கள்!… மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.!..

234 தொகுதிகளிலும் தாங்கள் ஆய்வு செய்த அறிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடமும் வழங்கி உள்ளீர்கள்!.. ஆய்வறிக்கையினை 70 வகைகளாக பிரித்து அளித்துள்ளீர்கள்!.. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தொகுதி திருவல்லிக்கேணியில் தொடங்கி முதல் முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் நிறைவு செய்து இருக்கிறீர்கள்.. வரவேற்று மகிழ்கிறோம்!..

பெஞ்சல் புயல் 15 மாவட்டங்களை வாரி சுருட்டி போட்டு இருக்கிறது… என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்கள். கடலூர் முதல் தருமபுரி கிருஷ்ணகிரி வரை வெள்ளக்காடாக மாறி உள்ளது. திருவண்ணாமலை நிலச்சரிவில் புதையுண்டு ஏழு உயிர்கள் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினரால் போராடி மீட்டுள்ளார்கள்!. நெஞ்சம் கணக்கிறது!.. பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளார்கள். மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார்கள்…

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வினை ஒத்தி வைக்கலாமா?.. என்று தங்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜனவரி மாதம் தேர்வினை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள்!…

ஆனால் திட்டமிட்டபடி 1,2,3 வகுப்புகளுக்கு என்னும் எழுத்தும் MIDLINE SURVEY பி.எட் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை கொண்டு பட்டதாரி/ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு ஐந்தாம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம் (SCERT) வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தங்களின் பார்வைக்கு வரவில்லையா?.. ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை பி.எட் படிக்கும் மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யக்கூடாது என தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பாக கடுமையான எதிர்ப்புகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம்..

ஆனால் மீண்டும் மீண்டும் அதே நடைமுறையைத் தான் கல்வித்துறை அமுல்படுத்தி வருகிறது. தங்களின் ஆய்வறிக்கையுடன் ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் தாங்கள் உள்ளத்தில் மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.

எண்ணும் எழுத்தும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நம்ப வைத்துள்ளார்கள்!.. அதனையும் தாங்கள் ஆய்வு செய்து உண்மைத் தன்மையை அறிய வேண்டுகிறோம்.

தேர்வுகள்பள்ளிகளில் ஒன்பதாம் தேதி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்குகிறது… இருந்தாலும் 13 ஆம் தேதி சர்வே நடப்பது சரியாக இருக்குமா?..

அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்தது போல MIDLINE SURVEY யினை ஒத்தி வைக்குமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சட்டமன்ற கூட்டத் தொடர் குறுகிய தொடராக நடைபெற்றாலும்… ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் அடையாள அறிவிப்புகள் ஏதேனும் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!… நல்லது நடைபெறட்டும்..

இந்து தமிழ் திசை முதல் பக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் தாங்களும் இணைந்து வாழ்த்து பெற்ற முதல் பக்க புகைப்படத்தை கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தோம்..

மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களும், மதிப்புமிகுக் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களும், மதிப்புமிகு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் அவர்களும் பரிந்துரை செய்திட பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மகிழ்வுறும் நல்ல அறிவிப்புகளை தாங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை உணர்வுடன்…

வா.அண்ணாமலை,

ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad