DMDK statement condemns the arrest of part-time teachers - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, 10 December 2024

DMDK statement condemns the arrest of part-time teachers

Responsive Ads Here
பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து தேமுதிக அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இது குறித்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்திய போது கைது செய்து, காவல் துறையை வைத்து அடக்கு முறையை ஏவி விட்டுள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

IMG_20241210_193133

No comments:

Post a Comment

Post Top Ad