ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, 23 February 2025

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

Responsive Ads Here
IMG-20250224-WA0029
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து முதலமைச்சரை மாலை சந்திக்கும் அமைச்சர்கள் குழு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அமைச்சர் களுடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அமைச்சர்கள் குழு முதலமைச்சரை சந்தித்து பேசுகிறோம். அதன் பின்பு முதலமைச்சர் முடிவை அறிவிப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்கள். எனவே, முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவரும் வரை நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டோம்... முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் ஜாக்டோ ஜியோவின் மாநில அமைப்பு கூடி முடிவை அறிவிக்கும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எனவே இந்த நிமிடம் வரை நாளை மறியல் என்ற நிலைப்பாட்டில் தான் ஜாக்டோ ஜியோ இருக்கிறோம் என்றும் அறிவித்துள் ளார்கள்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து 4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.

சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் மறியல் - ஜாக்டோ ஜியோ.
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88!%20%20


No protests - Group of Ministers to hold talks with union executives at the Secretariat tomorrow! - போராட்டாம் வேண்டாம் - சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நாளை பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

IMG_20250223_183420

No comments:

Post a Comment

Post Top Ad