தலைமை ஆசிரியர் உயிரிழப்பு - முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இரங்கல் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 5 March 2025

தலைமை ஆசிரியர் உயிரிழப்பு - முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இரங்கல்



தலைமை ஆசிரியர் உயிரிழப்பு - முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இரங்கல்

ஓசூர் அருகே அரசுப் பள்ளி அருகே தண்ணீர் குட்டையில் தவறி விழுந்த மாணவரும், மீட்க முயன்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.

ரூ.3 லட்சம் நிதியுதவி

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “தனி​யாருக்​குச் சொந்​த​மான பண்​ணைக் குட்​டை​யில் மூழ்கி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுரிசங்​கர், நித்​தின் ஆகியோர் உயரிழந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். இரு​வரது குடும்​பத்​தினர், உறவினர்​களுக்கு ஆறு​தல் தெரி​விப்​பதுடன், முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.3 லட்​சம் நிதி​யுதவி வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் (வயது 8) த/பெ. மணிகண்டன் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்கனையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here