பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 5 April 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், மாணவர் நலன் கருதி ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்கக்கோரி தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு

மதிப்பிற்குரிய அம்மா,

பொருள்: பத்தாம் வகுப்பு விடைத்தாட்கள் திருத்தும் பணிக்கு ஒரு முதன்மை மதிப்பீட்டாளருக்கு ஆறு உதவி மதிப்பீட்டாளர் நியமனம் - ஒரு உதவி மதிப்பீட்டாளருக்கு ஒரு வேளைக்கு பன்னிரண்டு விடைத்தாட்கள் மட்டும் மதிப்பீடு செய்ய - ஆணை பிறப்பிக்க கோருதல் - சார்பு. பத்தாம் வகுப்பு விடைத்தாட்கள் திருத்தும் பணி தொடங்க உள்ள நிலையில் மதிப்பீடு செய்வதில் தவறுகள் நேராவண்ணம் அப்பணியில் ஒரு முதன்மை மதிப்பீட்டாளருக்கு ஆறு உதவி மதிப்பீட்டாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும். விடைத்தாள் நகல் கோரும் விண்ணப்பங்கள் அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில், ஒவ்வொரு விடைத்தாட்களுக்கும் தேவையான கவனம் செலுத்தி மதிப்பீடு செய்திட ஏதுவாக ஒரு உதவி மதிப்பீட்டாளருக்கு ஒரு வேளைக்கு பதினைந்து விடைத்தாட்கள் என தற்போது இருப்பதை பன்னிரண்டு விடைத்தாட்கள் என்று மாற்ற வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here