ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 10 May 2025

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.



ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என தற்போதைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு.

பார்வையில் பெறப்பட்டுள்ள அரசுக் கடிதம் மற்றும் அரசாணை உரிய தொடர் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேற்காணும் அரசுக்கடிதம் / அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகள் / நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக் கல்வி-2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டஆசிரியர்கள் (ம) ஆசிரியரல்லாத பணியாளர்கள்-வழக்குப்பதிவு செய்யப்பட்டது- தற்போதுவரை நிலுவை- குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது-

உரிய அறிவுறுத்தல்கள் சார்ந்து அரசுக் கடிதம் பெறப்பட்டது- அனைத்து அலுவலர்களுக்கு சார்பு செய்தல் - தொடர்பாக

1 அரசுக் கடித எண்.202/பக-5(2)/பள்ளிக் கல்வி துறை 2025-1 நாள் 08.04.2025 2.அரசாணை(நிலை) எண்.113 மனித வள மேலாண்மைத்துறை நாள் 13.10.2021 பார்வையில் பெறப்பட்டுள்ள அரசுக் கடிதம் மற்றும் அரசாணை உரிய தொடர் அரசுக்கடிதம் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. மேற்காணும் /அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகள்/ நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பார்வையில் கண்ட அரசு கடிதம் மற்றும் அரசாணை நகல் Li பள்ளிக்கல்வி அக்குநர் 405 Ai All Sectio அனுப்புநர் ΓΙ JDP வாய்மையே வெல்லும் 021352. பள்ளிக் கல்வித் துறை தலைமைச்செயலகம், GLU GOT 60060-600 009, கடிதம் எண்.202/ப.க.5(2)/2025-1. நாள்.08.04.2025. டாக்டர். சந்தர மோகன் B, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர். பெறுநர்: இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை--6. (இ) மாநிலத்திட்ட இயக்குநர், ருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-6. (இ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-6. (இ) தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6. (இ) இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-6. (இ) இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6.(இ) இயக்குநர், தனியார் பள்ளிகள் யக்ககம், சென்னை-6.(இ) க்கல்வி ا ناصر இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-6. (இ) இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. (இ) இயக்குநர், பொது நூலக இயக்ககம், சென்னை-2. (இ) ஐயா, இயக்குது. அலுவலகம் 11 5 APR 2025 400 பொருள்: பார்வை: பள்ளிக்கல்வி - 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது அறிவுறுத்தல் வழங்குதல் தொடர்பாக. அரசாணை (நிலை) எண்.113, மனித வள மேலாண்மைத் துறை, நாள்.13.10.2021. பார்வையில் காணும் அரசாணையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கினங்க பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2016, அரசு 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.08.2017 (ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்), 07.09.2017 முதல் 15.09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன: வரை) vii. மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும், பணிக் காலமாக முறைப்படுத்தப்படுகிறது: அவ்வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன; அவ்வொழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்; வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அரசுக் கடித எண்.23689/கே1/2017-6, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (கே)த் துறை, நாள்.27.09.2017-இன்படி, 07.09.2017 முதல் 15.09.2017 வரையிலான வேலை நிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் பணிபுரிந்து ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக் காலத்தினை தற்போது பணிக்காலமாக முறைப்படுத்துவதன் காரணமாக மீண்டும் ஊதியம் பெற்று வழங்கும் நிலை எழாது; வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தினை மேற்குறிப்பிட்டவாறு பணிக்காலமாக முறைப்படுத்தும் போது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளார் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பார்வையில் காணும் அரசாணையின் நகல் இத்துடன் உரிய நடவடிகக்கைக்காக இணைத்தனுப்பப்படுகிறது. இவ்வரசாணையின் பத்தி 5-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கள் நம்பிக்கையுள்ள, அரசு முதன்மைச் செயலாளருக்காக. 8-4-25 மிழ் சுருக்கம் பொதுப்பணிகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழான அறிவிப்பு 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக்காலமாக முறைப்படுத்துதல் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. மனித வள மேலாண்மைத் (கே) துறை அரசாணை (நிலை) எண். 113 நாள் 13.10.2021 பிலவ, புரட்டாசி -27, திருவள்ளுவர் ஆண்டு 2052, படிக்க: 1. அரசுக் கடித எண்.23689/கே.1/2017-1 மற்றும் 2, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 17.08.2017 மற்றும் 07.09.2017. 2. அரசுக் கடித எண்.23689/கே.1/2017-6, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 27.09.2017. 3. அரசுக் கடித எண்.38148/கே.1/2018-11 மற்றும் 13, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 18.01.2019 மற்றும் 24.01.2019. 4. அரசாணை (நிலை) எண்.9, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 02.02.2021. ஆணை: கடந்த 2016, 2017 மற்றும் 2019.ஆம் ஆண்டுகளில், சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வேலை நிறுத்தப் போராட்ட காலங்களுக்கு, பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை" என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன. (த.பி.பா) : .2 2 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டும் கைவிட மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டன. 3. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டக் காலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பணியாளர் சங்கங்கள் அரசுக்கு முன்வைத்து வந்தன. 4. அதனைத் தொடர்ந்து, 07.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை கூட்டத்தில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன:- 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலத்தினைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனைப் பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவை பணிக் காலமாக முறைப்படுத்தப்படும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரி செய்யப்படும்.

5. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, பின்வரும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன:-

(i). 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் (10.02.2016 முதல் 19.022016 வரை, 22.08.2017 (ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்), 07.09.2017 முதல் 15.09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 வரை) பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன; .3. மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் நீக்கக் காலமும், பணி முறைப்படுத்தப்படுகிறது; பணிக் காலமாக அவ்வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன;

அவ்வொழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்;

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்;

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தின்படி, 07.09.2017 முதல் 15.09.2017 வரையிலான வேலை நிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் பணிபுரிந்து ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக் காலத்தினை தற்போது பணிக்காலமாக முறைப்படுத்துவதன் காரணமாக மீண்டும் ஊதியம் பெற்று வழங்கும் நிலை எழாது; வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தினை மேற்குறிப்பிட்டவாறு பணிக்காலமாக முறைப்படுத்தும் போது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளார் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். (ஆளுநரின் ஆணைப்படி) வெ.இறையன்பு அரசு தலைமைச் செயலாளர் பெறுநர் அனைத்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள்/ முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், தலைமைச் செயலகம், சென்னை 600009.

அனைத்து தலைமைச் செயலகத் துறைகள், சென்னை - 600009. அரசு முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, சென்னை 600 009. அரசு முதன்மை செயலாளர், உயர் கல்வித் துறை, சென்னை 600 009. ஆணையர், கருவூலம் மற்றும் கணக்கு துறை, சென்னை-600 035. அனைத்து துறை தலைவர்கள் (தலைமைச் செயலகத்துறை வழியாக). அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்.

பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை / மதுரை கிளை. காவல் துறை தலைமை இயக்குநர், சென்னை-600 004. செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை- 600 009. நகல் முதலமைச்சரின் செயலாளர் – III, முதலமைச்சர் அலுவலகம், சென்னை - 600 009. நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை - 600 009. தலைமைச் செயலாளரின் முதன்மை தனிச் செயலர், சென்னை- 600 009. மனித வள மேலாண்மைத் துறை செயலாளரின் முதன்மை தனிச் செயலர், சென்னை - 600 009. மனித வள மேலாண்மைத் (நி.சீ.2) துறை, சென்னை - 600 009. (தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிடுதல் குறித்து) இருப்புக் கோப்பு / உதிரி நகல் //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// வெ.அனந்தராமன் பிரிவு அலுவலர் 13.x.21 13.10.2021

CLICK HERE TO DOWNLOAD JACTO GEO - Strike 2019 SSTA Up date Go 05.05.2025 PDF

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here