ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டிய அரசுப்பள்ளி
காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியால் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளி டிஜிட்டல் முறையில் இயங்கி வரும் நிலையில் , தற்போது ஆசிரியர்களின் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது சமூக வலைதள பதிவில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
இப்பள்ளி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்காக வழக்கமான விளம்பரங்களையோ, படிவங்களையோ இல்லாமல், QR கோட் என்ற முறையை அறிமுகம் செய்து, மீண்டும் மீண்டும் புதுமையான அணுகுமுறைகளை கையாண்டு, மாணவர்களை வளர்ச்சி பாதைக்கு அறிவியல் பார்வையில் அழைத்து செல்லும் இந்த முயற்சிக்கு, நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டி ஊக்கமளித்த மாண்புமிகு அமைச்சருக்கு நன்றியும், புதுமைகளை நிகழ்த்தி வருகிற திருப்புட்குழி தொடக்கப்பள்ளியின் வளர்ச்சிக்கான பணியில் முக்கிய பங்காற்றும், ஒரு நல்ல ஆசிரியருக்கான விருதும் அதற்கான பரிசுத்தொகையும் தமிழ்நாடு அரசு வழங்கியதிலும், அதை “என் பள்ளியின் வளர்ச்சிக்காகவே செலவழிப்பேன்” என்று மனமுவந்த முன்முயற்சியுடன் செயல்படும் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் அனைத்து ஆசிரியர் பெருமக்கள், துணை நிற்கும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும், இதயம் நிறைந்த பாராட்டுகளும்!
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம்!"
அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு
காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி அரசுப்பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை பற்றி...
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும்பொருட்டு நவீன முறையில் இந்த க்யூஆர் கோடு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக பள்ளியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில்,
"மாணவர் சேர்க்கை விண்ணப்பம்
வீட்டில் இருந்தே உங்கள் குழந்தைகளை நம்ம திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்திடுங்க..
அதற்கு க்யூ ஆர் கோடு ஸ்கேன் பண்ணுங்க; நம்ம ஸ்கூல்ல சேருங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பேனரைப் பகிர்ந்து 'சூப்பர்' எனப் பாராட்டியுள்ளார்.
No comments:
Post a Comment