1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 10 July 2025

1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.



1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை ( எண் .02 / 2025 ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் ( Website : https://www.trb.tn.gov.in ) வாயிலாக இன்று ( 10.07.2025 ) வெளியிடப்படுகிறது.

பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் கல்வித் தகுதி , வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக ( Online Application ) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . எனவே , விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும் . அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tngov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் . இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

👇👇👇👇

Notification & Full Details - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here