ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 30 April 2024

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள்

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள். Eligibility test should not be made mandatory for the promotion of primary school headmasters, selection should be conducted among them on the basis of seniority, headmasters should be promoted on behalf of the Tamil Nadu Government Employees Teachers Welfare Association - President - S. Arunan - Request

~

தொடக்கக்கலவித்துறையில் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டியலை தேர்வு செய்ய அந்த்ந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர் , அதாவது தகுதி தேர்வு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க இந்த பட்டியலை தயார் செய்வதாக அறிகிறோம் , ஏற்கனவே ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு இடைநிலை ஆசிரியர்களின் பணி மூப்பை கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்குவது வழக்கம் ஆனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தேசித்து உள்ளதாக அறிகிறோம் , இதனால் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர் இடைநிலைநிலை ஆசிரியர்களின் பணிமூப்பையும் மனநிலையும் கருத்தில் கொண்டு தகுதி தேர்வு கட்டாயம் என்றாலும் இடைநிலை ஆசிரியர்களின் பணிமூப்பின் அடிப்படையில் பட்டியலை தயாரித்து அவர்களுக்குள்ளாக ஒரு தேர்வை நடத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலையாசிரியர் பதவி உயர்வு வழங்க மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here