IFHRMS மென்பொருள் மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் தற்போது பிடித்தம் செய்யாமல் நிறுத்தி வைக்கக் கோருதல்-தொடர்பாக - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் - Tamil Nadu Government Officers' Union has requested that the IFHRMS software be suspended from income tax deduction as there are various errors.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் |
சென்னை
TAMILNADU GOVERNMENT OFFICIAL'S UNION
பெறுதல்.
அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள், நிதித்துறை.
தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-09
அய்யா,
பொருள்:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்-தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு IFHRMS மென்பொருள் மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் தற்போது பிடித்தம் செய்யாமல் நிறுத்தி வைக்கக் கோருதல்-தொடர்பாக.
104 ஆண்டுகால பாரம்பரியமிக்கதும், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கங்களில் முதன்மைச் சங்கமாகவும் திகழும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கையை தங்களது பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்புகின்றோம்.
தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊதியம் பெறும் நடைமுறையை IFHRMS மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு நடைமுறை சிக்கல் இருந்தது. அவைகளை ஒரளவு களைந்த பிறகும் தற்போது Server பிரச்சினையால் இன்னும் பிரச்சினைகள் முழுமையாக களையப்படவில்லை.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் வருமான வரியை முறையாக கணக்கிட்டு ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வந்தன.
வருமான வரி பிடித்தம் அதிகமாக கட்ட வேண்டியவர்கள் தங்களது வரியை கணக்கிட்டு மாதந்தோறும் வரியை பிடித்தம் செய்ய சம்மதித்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வருமான வரியை கணக்கிட்டு மாதந்தோறும் பிடித்தம் செய்யும் நடைமுறை IFHRMS மென்பொருள் மூலம் துவக்கி உள்ளார்கள். வருமான வரி விலக்கு பெறும் இனங்களான வீட்டுக்கடன். மருத்துவ காப்பீடு போன்றவைகளில் பணம் செலுத்துபவர்கள் இந்த மென்பொருள் மூலம் பழைய வருமான வரி திட்டம் மூலம் (Old Regime) வருமான வரி பிடித்தம் செய்யப்படும் எனவும். விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு புதிய நடைமுறை (New Regime) மூலம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.
ஆனால், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட மென்பொருள் (IFHRMS) மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. வருமான வரி கணக்கீடு செய்ததை விட அதிக அளவில் பிடித்தம் செய்வது வருமான வரியே இதுவரை செலுத்தாத அடிப்படை பணியாளர்களின் ஊதியத்தில் கூட பிடித்தம் செய்வது. புதியதாக பணியில் சேர்ந்து நிரந்தர கணக்கு எண் பெறாதவர்களுக்கு பிடித்தம் செய்வது. 4 சதவீதம் பிடித்தம் செய்ய வேண்டிய Cess Tax கூட சரியான சதவீதத்தில் பிடித்தம் செய்யப்படாமை, வருமான வரி விலக்கு பெறும் வீட்டுக்கடன் போன்றவைகளை உள்ளீடு இல்லாததால் இவைகளை பதிவேற்றம் செய்ய முடியாமை போன்ற பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் இவ்விஷயங்களை சரி செய்ய வேண்டும் எனவும், அதுவரை IFHRMS மென்பொருள் மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதை நிறுத்தி வைக்கவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment