யாருக்கு வாக்களிக்க வேண்டும் ? தேர்தல் நாள்: ஏப்ரல் 19 - நமது வாக்குகள் விற்பனைக்கல்ல என்பதை உறுதி செய்வோம்!!! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 18 April 2024

யாருக்கு வாக்களிக்க வேண்டும் ? தேர்தல் நாள்: ஏப்ரல் 19 - நமது வாக்குகள் விற்பனைக்கல்ல என்பதை உறுதி செய்வோம்!!!



யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?

வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் ஆகும் நமது வாக்குகளை தவறாது பதிவு செய்வோம். 100% வாக்குப் பதிவு நடந்திட முயற்சி செய்வோம்.

தேர்தல் நாள்: ஏப்ரல் 19

நமது வாக்குகள் விற்பனைக்கல்ல என்பதை உறுதி செய்வோம்!!!

யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை வாக்களிப்பதற்கு முன் நமது அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் எதிர்காலத்தையும் நாட்டு மக்களின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* ஏப்ரல் 19 அன்று ஓட்டு போட வரிசையில் நிற்க தயங்காமல் அவசியம் ஓட்டு போட வேண்டும். நகைக்கடை முதல் பல இடங்களில் வரிசையில் நிற்க தயங்குவதில்லை என்பதை உணர்வோம்.

*நோட்டாவிற்கு வாக்களிப்பது தவிர்க்கப்பட வேண்டும். பதிலாக தேசத்திற்கு யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும்.

*நமது வாக்கு குடும்ப அரசியல் செய்பவர்களுக்கா... அல்லது தேசத்தை உலக அளவில் உயர்த்தி வருபவர்களுக்கா...

* பாட புத்தகங்களில் தவறான தகவல்களை தருபவர்களுக்கா... அல்லது இந்த நாட்டின் பண்பாட்டின் தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்து, நவீன தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துபவர்களுக்கா...

* ஆட்சி, பதவிக்காக எதை வேண்டுமானலும் செய்பவர்களுக்கா... அல்லது பதவி போனாலும் தேசத்திற்காக, மக்களுக்காக சேவை பணிகளை, செய்து வருபவர்களுக்கா...

*நீட் தேர்வு மூலம் சாதாரண ஏழை மக்களின் குழந்தைகளது மருத்துவர் ஆகும் கனவு நனவாகி வருகிறது. நமது வாக்கு நீட் தேர்வை எதிர்ப்பவர்களுக்கா... அல்லது ஆதரிப்பவர்களுக்கா...

* நூற்றுக்கணக்கான நமது கோயில்களை இடித்தவர்களுக்கா.... அல்லது இடிக்கப்பட்ட நமது பெருமை மிகுந்த கோயில்களை மீட்டு அற்புதமாய் கட்டியவர்களுக்கா...

* பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் என்பது மேடையில் மட்டுமே பேசுபவர்களுக்கா... அல்லது அதை நடைமுறை படுத்தும் நபர்களுக்கா... * பயங்கரவாதிகளின் கூடாரமாக காஷ்மீர் மாற துணை புரிந்தவர்களுக்கா... அல்லது அங்கே மீண்டும் அமைதியை உருவாக்கி வேலை வாய்ப்பை ஏற்படுத்தியவர்களுக்கா...

அப்படியும் யாருக்கு வாக்களிப்பது என்று புரியவில்லை என்றால்...

• குடியால், போதை பழக்கத்தால் கணவரை, மகனை இழந்த தாய்மார்களிடம் கேளுங்கள்..!

ஜம்மு காஷ்மீரி ஹிந்துக்களிடம் கேளுங்கள்...!

அயோத்தியின் மகான்களைக் கேளுங்கள்...!

உக்ரைனில் படிக்கும் மாணவர்களிடம் கேளுங்கள்...!

கிசான் நிதி பெறும் விவசாயிகளிடம் கேளுங்கள்...!

இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேளுங்கள் ...!

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களிடம் கேளுங்கள்...!

. காசி விஸ்வநாதரின் பக்தர்களைக் கேளுங்கள்...!

முத்தலாக் என்ற கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கேளுங்கள்...!

வெளிநாடுகளில் வாழும் நமது நாட்டு மக்களின் மனநிலையை கேளுங்கள்...!

கேரளா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் துன்பத்தில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள்...!

அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பினால் பயனடைபவர்களிடம் கேளுங்கள்...!

• கொரோனா காலம் தொடங்கி இன்றும் இலவச ரேஷன் பெறுபவர்களிடம் கேளுங்கள்...!

ஆயுஷ்மான் கார்டு மூலம் மருத்துவ காப்பீடு பெற்றவர்களிடம் கேளுங்கள்...!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் நிரந்தர வீடு கிடைத்த ஏழைகளிடம் கேளுங்கள்...!

இதே போன்று பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் கேளுங்கள். யாருக்கு வாக்களிப்பது என்று.... சிந்தித்து வாக்களிப்போம்...!

மற்றவர்களுக்கும் புரிய வைத்து வாக்களிக்கச் செய்வோம்...!

100% வாக்குப் பதிவு நமது இலக்கு...!

தாயகப்பணியில்

தேசிய வாக்காளர் பேரவை

2,ரங்கசாயி தெரு,பெரம்பூர்,சென்னை -600011.

தொடர்பு எண்:94457 78373

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here