பூத் ஏஜெண்ட் கொண்டுபோக வேண்டியவை
1.FORM 10
2.PAD
3.வாக்காளர்கள் வருகையை குறிக்கும் படிவம்
4.வாக்காளர் பட்டியல்
5.PEN, PENCIL,
6.வாக்காளர் அடையாள அட்டை
பூத் ஏஜெண்ட் பணிகள் ;
1. காலை 5.30 மணிக்கு நாம் பூத்திற்கு செல்ல வேண்டும்.
2. நமது FORM 10யை கொடுத்து அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. (MOCK POLL) மாதிரி வாக்குபதிவில் கலந்து கொண்டு நமது வாக்கு பதிவு செய்து சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
4. 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கிய உடன் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் மற்றும் வாக்காளர் பட்டியலில் சரியாக குறித்து கொள்ள வேண்டும்.
5. நமது துணை முகவரையும் அழைத்து சென்று கையெழுத்து பெற்று கொள்ளலாம்.
6. நமது துணை முகவர் வராமல் வெளியே செல்ல கூடாது.
7. மாலை 4 மணிக்கு மேல் கண்டிப்பாக வெளியே செல்ல கூடாது.
8. அனைத்து வாக்கு பதிவு முடிந்தவுடன் கடைசியாக நமது சீல் வைத்த பின் 17C படிவம் அதிகாரியிடம் இருந்து பெற்று வந்து நமது பொறுப்பாளரிடம் கொடுக்கவேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளையும் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் 17சி படிவம் பெறாமல் வெளியே வரக்கூடாது.
No comments:
Post a Comment