Summer vacation- Is student attendance sufficient only for examination days after 8th?- Newspaper reports to clear confusion and request for change of examination date to 23rd Chitra Poornami- Bias
கோடை விடுமுறை- 8 ஆம் தேதிக்குப்பின்னர் தேர்வு நாட்களுக்கு மட்டும் மாணவர் வருகை போதுமானதா?- செய்தித்தாள் செய்திகள் குழப்ப நிலை போக்குதல் மற்றும் 23 ஆம்தேதி சித்ரா பௌர்ணமி தேர்வு நாள் மாற்றம் வேண்டுதல்- சார்பு
மதிப்புமிகு இயக்குனர் ஐயா அவர்களுக்கு வணக்கம
எட்டாம் தேதிக்குப் பிறகு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டுமா அல்லது ஆசிரியர்கள் மட்டும் வந்தால் போதுமா என்ற குழப்பம் எல்லா இடங்களிலும் நிலவி வருகிறது
காரணம் செய்தித்தாள்களில் எட்டாம் தேதிக்கு பிறகு தேர்வு நாட்களில் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என தகவல்கள் பரப்பப்படுவதால் இக் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது
மேலும் 22 23 ஆகிய இரண்டு நாட்களில் முறையே அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன
23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி தினம் கொண்டாடப்படுவதால் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வாய்ந்த கிரிவலம் நடைபெற உள்ளது.
இந்நாட்களில் இவ்விரு நகரங்களிலும் விழாவின் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பெரும் சிரமங்கள் நிலவும்
சித்ரா பௌர்ணமி அன்று தமிழ்நாடு முழுவதும் விசேட தினம் என்பதால் பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதில் சிரமம் நிலவுகிறது எனவே ஒட்டுமொத்தமாக 23 க்கு பதில் 24ஆம் தேதி என தேதி மாற்றம் செய்து அறிவிக்கலாம்
அல்லது
திருவண்ணாமலை மதுரை போன்ற விழா நடைபெறும் நகரங்களுக்கு மட்டுமாவது தேதியை மாற்றி அறிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்
மேற்கண்ட குழப்பங்களுக்கு விரைவில் தாங்கள் தீர்வு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்
நன்றி
கே. பி.ரக் ஷி த் மாநிலத் தலைவர்
த மிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:
Post a Comment