நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தல் - DRPGTA 02.04.2024
*DRPGTA 02.04.2024*
*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும்**
அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA
பெறுநர்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெ.குமரகுருபரன் இஆப அவர்கள்
பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் தலைமைச் செயலகம் சென்னை 9
பொருள்:- நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டுதல் சார்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நீட் பயிற்சியானது மார்ச் 25 மே 2 வரை நடைபெற உள்ளது. இதனை எமது அமைப்பினர் வரவேற்கின்றோம்.
இப்பயிற்சி மையத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பயிற்சிக்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இப் பயிற்சியில் கலந்து கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு எவ்வித *மதிப்பூதியமும் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை*
1.கடந்த 2017 -18 ஆண்டுகளில் தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கபடுவார்கள் என மாநிலம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை செய்து எமது அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆட்சியில் ஒரு மணி நேரத்துக்கு மதிப்பூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையானது பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய ஆட்சியில் மதிப்பூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுத்தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தியதற்கான உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.
எனவே மாநிலம் முழுவதும் NEET /JEE பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு தனியாக மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.
2. JEE & CUET போன்ற ஒன்றிய அரசின் நுழைவுத்தேர்வுகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு *விண்ணப்ப கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம் போன்றவை மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படுவது* போல *நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அத்தகைய கட்டணத்தினை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்*.
3. சனிக்கிழமைகளில் பயிற்சி இருக்கும் பொழுது பயிற்சி ஆசிரியர்களுக்கு அதற்கான ஈடு செய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும்.
4. மாவட்ட அளவிலான NEET & JEE கோடை பயிற்சியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ,தேநீர், மதிய உணவு போன்றவை பல்வேறு மாவட்டங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அவைகள் வழங்கப்படும் என்று DSE யிலிருந்து வெளிவந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றை முறையாக அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
5. NEET/ JEE எழுத விரும்பும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலிருந்தே முறையாக பயிற்சியளிக்க வேண்டும். இப் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு, நீட் கையேடுகள் வழங்கப்படவேண்டும்.
இப்படிக்கு
ஆ.இராமு,
மாநிலத்தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA
இடம் சென்னை
தேதி:02.04.20.24
நகல்
மதிப்புமிகு
முனைவர் க. அறிவொளி அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்குநர்,
பள்ளிக்கல்வி இயக்குநரகம்,
சென்னை 6 .
No comments:
Post a Comment