ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பு பெற்றோர்கள் இதை செய்யலாம். - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 20 May 2024

ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பு பெற்றோர்கள் இதை செய்யலாம்.

Responsive Ads Here
Parents%20can%20do%20this%20before%20schools%20open%20in%20June.


ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பு பெற்றோர்கள் இதை செய்யலாம்.

ஒரு எக்செல் ஷீட்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களில் உள்ள பாடங்களை படத்தில் காட்டி இருப்பது போல தொகுத்து டைப் அடிக்கலாம்.

அந்த எக்செல் ஷீட்டை இரண்டு காப்பி பிரிண்ட் எடுத்து ஒரு பிரிண்டை வீட்டு சுவரில் ஒட்டி விடுங்கள்.

இன்னொரு பிரிண்டை நீங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி செய்யும் போது பெற்றோராக உங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் வரும்.

உங்களுக்கு இந்த பாடங்கள் எல்லாம் புரிய வேண்டும் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால் Tracking செய்வதற்கு இந்த எக்செல் ஷீட் உங்களுக்கு உதவும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமை அரைமணி நேரம் எடுத்து “ இந்த வாரம் என்ன என்ன பாடமெல்லாம் க்ளாஸ்ல எடுத்தாங்க” என்று உங்கள் வீட்டு பிள்ளையிடம் கேட்டு அதை இந்த பிரிண்ட் அவுட்டில் ஹைலைட் செய்து கொள்ளுங்கள்.

அதில்லாமல் உங்கள் பிள்ளைகளை முதன் முதலில் ”ஒரே ஒருமுறை வாசிக்க” பழக்கப்படுத்துங்கள்.

ஒரே ஒருமுறை வாசிப்பது என்பது பாடத்தை எடுத்து ஒருமுறை மெலிதான சத்ததோடு வாசிப்பது. அதில் 70% புரிந்தால் கூட போதுமானது. ஆனால் ஒரே ஒருமுறை வாசித்திருக்க வேண்டும்.

தமிழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு இந்த ”70 % புரிதலோடு ஒரே ஒருமுறை வாசிப்பது” மிக முக்கியம்.

அதையும் இந்த எக்செல் ஷீட்டை வைத்து சாத்தியப்படுத்தலாம்.

நீங்கள் அருகில் இருக்க உங்கள் வீட்டு பிள்ளையை ஒருமுறை வாசிக்க சொல்லுங்கள். ஒரு பேரா உங்கள் பிள்ளை, ஒரு பேரா நீங்கள் என்று வாசித்தாலும் சரிதான்.

இப்படி அனைத்து பாடங்களையும் வாசிக்க வைத்து விட்டீர்களா என்று டிராக் செய்யவும் இந்த எக்செல் ஷீட் உதவும்.

செய்து பாருங்கள். இந்த எளிய டெக்னிக் பல பல மேஜிக்குகளை செய்யும்.

இந்த டெக்னிக்கை உங்கள் பிள்ளையின் கல்வியறிவுக்கு அல்லது அறிவு வளர்ச்சியாக செய்கிறீர்கள் என்பதை விட

ஸ்கூலுக்கு போவதை ஜாலியாக , மன அழுத்தம் இல்லாமல், ரசித்து பாடம் கற்கப் போகும் சூழ்நிலையை உருவாக்க செய்கிறீர்கள் என்று நினைத்து செய்கிறீர்கள்.

அறிமுகம் ஆகாத எதோடும் நாம் பழகுவதில்லை

பழகாத எதையும் நாம் விரும்புவதும் இல்லை.

விரும்பாத எதையும் நாம் ரசிப்பதும் இல்லை.

இதே தியரிதான் மாணவர்களுக்கும் உங்களுக்கும் பள்ளிப் பாடங்களின் மீது இருக்கிறது.

உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் பள்ளி பாடங்களை எப்போது ரசிப்பீர்கள் ?

அதை விரும்பினால் ரசிப்பீர்கள்.

விரும்புவதற்கு பாடங்களோடு பழக வேண்டும்.

பாடங்களோடு பழக அதன் அறிமுகம் வேண்டும்.

அறிமுகம் ஆக பாடங்களை முதன் முதலில் ஒரே ஒருமுறை வாசிக்கவும் வேண்டும்.

அப்படி வாசிக்க இந்த டிராக்கிங் எக்செல் ஷீட் உங்களுக்கு உதவும்.

பெற்றோராக இந்த சைக்காலஜியின் அடிப்படையில் இந்த எக்செல் ஷீட்டை நீங்கள் தயாரித்து பிரிண்ட் எடுத்து உங்கள் வீட்டு சுவரில் ஒட்டினால்

நீங்கள் ஒரு நல்ல கல்வி சூழலை உங்கள் வீட்டில் உருவாக்க ஆர்வம் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment

Post Top Ad