2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு சர்ச்சைகளும் குளறுபடிகளும் - அவதியில் மாணவர்கள்! - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 12 June 2024

2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு சர்ச்சைகளும் குளறுபடிகளும் - அவதியில் மாணவர்கள்!

Responsive Ads Here
Controversies-and-glitches-in-NEET-2024-Students-in-trouble
2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு சர்ச்சைகளும் குளறுபடிகளும் - அவதியில் மாணவர்கள்!

கல்லூரி கதவை தட்ட வேண்டிய மாணவர்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்

2024 நீட் எக்ஸாம் 4750 தேர்வு மையங்களில் இந்தியாவில் நடைபெற்றது

13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது

24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்

ஜூன் 14ஆம் தேதி ரிசல்ட் வரும் என்று என் டி ஏ முதலிலேயே அறிவித்துவிட்டு பத்து நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ரிசல்ட்டேடு நீட் ரிசல்ட் அவசர அவசரமாக வெளியிட்டார்கள்

13 லட்சத்து 14,268 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள் இது 56 சதவீத விழுக்காடு தேர்ச்சிஆகும்

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் இயங்குவது தான் என் டி ஏ NTA வினுடைய வேலை நீட் தேர்வு நம்பகத்தன்மையோடு நடத்திக் கொடுப்பதுதான்

ஒரு தேர்வு எழுதும் போது முதல் மதிப்பெண் எடுப்பது எப்போதும் ஒருவர் இருவர் இல்லை நான்கு ஐந்து பேர் கூட எடுப்பார்கள் ஆனால் கடினமான நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் 67 பேர் 720க்கு 720 எடுத்துள்ளார்கள்

அதேபோன்று 719 718 717 நீட் தேர்வில் மதிப்பெண் வரக்கூடாது நீட் தேர்வு என்பது ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் ஆகும்

ஒரு கேள்வி தவறாக எழுதினால் மைனஸ் ஒரு மார்க் பிளஸ் 4 மார்க் என ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்

நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை

டைம் லாஸ் காரணம் காட்டி 1563 பேருக்கு கிரேஸ் மார்க் வழங்கப்பட்டுள்ளது இவர்கள் அனைவருமே நீதிமன்றத்தை நாடியவர்கள்

இந்த கிரேஸ் மார்க் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று ஆய்வு செய்ய தேசிய தேர்வு முகமை மூலம் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது

நீதிமன்றத்தை நாட தெரியாத ஏழை மாணவர்களுடைய நிலைமை என்ன

பாட்னாவில் ஒரு நாள் முன்பாகவே நீட் வினாத்தாள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது

அரியானாவில் பரிதாபாத் தேர்வு மையத்தில் ஒரே தேர்வு மையத்தில் ஆறு மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்

பிளஸ் டூ தேர்வில் இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண் பெற்ற மாணவர் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்றது எப்படி இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடியில் ஒரு தேர்வு மையத்தில்எழுதிய 1500 மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட நீட் வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டுள்ளது

N TA JDN , JUNIOR DOCTORS

இவர்கள் சிபிஐ விசாரணை நடத்த கோரி கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்

கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை மாணவர்கள் சார்பாக கோரப்பட்டது நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது

இளநிலை மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது

உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பியுள்ளது

NTA DIRECTOR SUBODH KUMAR SINGH அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்

மீண்டும் நீட் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை எட்டாம் தேதி விசாரணைக்கு வருகிறது

தகவலுக்காக

பி பரசுராமன் TNPTA

மாநில துணை பொதுச் செயலாளர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் திருப்பத்தூர் மாவட்டம்

No comments:

Post a Comment

Post Top Ad