தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் மாத சம்பளம் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 18 October 2024

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் மாத சம்பளம் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்



தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் மாத சம்பளம் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையை கொண்டாட, இந்த மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்' என, பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட, 32,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கான சம்பளம், மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூலைக்கு பின், மத்திய அரசின் பங்களிப்பு தொகை, தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால், கடந்த மாத சம்பளம் வழங்க முடியாத நிலை, தமிழக அரசுக்கு ஏற்பட்டது. ஆசிரியர்கள் போராட்டத்துக்கு பின், தமிழக அரசே முழு சம்பளத்தையும் வழங்கியது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர், தங்களுக்கான இம்மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்; பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here