I want to be like Lucky Bhaskar! School students escape after watching the movie - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, 12 December 2024

I want to be like Lucky Bhaskar! School students escape after watching the movie

Responsive Ads Here
லக்கி பாஸ்கர் மாதிரி ஆகணும்! படம் பார்த்து எஸ்கேப்பான பள்ளி மாணவர்கள். 😳

விசாகப்பட்டினம்:

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் பார்த்த 4 மாணவர்கள் அவர் போன்று ஆகவேண்டும் என்று எண்ணி விடுதியில் இருந்து தப்பி ஓடி இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மஹாராணிபேட்டையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர்.

அவர்களில் சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண்குமார் ஆகிய 4 பேர் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர்.

அந்த படத்தின் தாக்கம் அவர்கள் 4 பேரையும் அதிகம் பாதித்ததாக தெரிகிறது. லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருப்பார்.
%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


பின்னர் கார், வீடு என சொகுசான மனிதராக மாறி இருப்பார்.

அவரின் கதாபாத்திரம் 4 பேரையும் வெகுவாக ஈர்க்க, அவரை போல வசதிகளுடன் வாழ எண்ணி உள்ளனர்.

நாங்களும், கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறோம் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்து உள்ளது.

வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad