ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வித் துறை - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 11 December 2024

ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வித் துறை

Responsive Ads Here
%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20


ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வரும் 30-ந் தேதி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மாவட்டத்திற்குள்ளாக, மாவட்டம் விட்டு மாவட்டம், மனமொத்த மாறுதல் என்ற வரிசைப்படி இந்த கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் & விண்ணப்ப படிவம் - Dec 2024

2024-25 ஆம் ஆண்டிற்கான பகுதி நேரப் பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது . பகுதி நேரப் பயிற்றுநர்கள் விருப்ப மாறுதல் கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட நெறிமுறைகளை கடைபிடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

part%20time%20teachers%20transfer%202024%20-%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20&%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20-%20Dec%202024


நக.எண்.2665/C1/பநேப/ஒபக/2024, நாள்.11.12.2024

பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் -சார்பு.

பார்வை:

1. அரசாணை நிலை எண்.177, பள்ளிக் கல்வி சி2 துறை நாள்.11.11.2011.

2. அரசாணை நிலை எண்.186 (SSA) பள்ளிக் கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம் துறை நாள்:18.11.2014

3. சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண். 1738/ துறை நாள்:26.092018.

4. அரசாணை நிலை எண். 15 பள்ளிக்கல்வித் (அகஇ2) துறை நாள்: 01.02.2021.

5. அரசாணை நிலை எண்.20 பள்ளிக் கல்வித்(அகஇ2) துறை நாள்: 02.02.2021

6. அரசாணை நிலை எண். 176, பள்ளிக் கல்வி SE5(1) துறை நாள்: 17.12.2021.

7. சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான பகுதி நேரப் பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. பகுதி நேரப் பயிற்றுநர்கள் விருப்ப மாறுதல் கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட நெறிமுறைகளை கடைபிடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. பகுதிநேரப் நடைபெறும். பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு 30.12.2024 அன்று 2. முதலில் அந்தந்த மாவட்டத்திற்குள்ளாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் மனமொத்த மாறுதல் நடத்தப்பட வேண்டும்.

3. மாறுதல் பெறும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் புதிய பணியிடத்தில் சேர வேண்டும். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அதன் தொகுப்பறிக்கையினை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.

4. பகுதி நேரப் பயிற்றுநர்களின் விருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இவ்வாணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது.

5. இம்மாறுதல் பெறும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் விருப்பத்தின்மேல் மேற்கொள்ளப்படுவதால் மாறுதல் பயணப்படிகள் வழங்கப்படமாட்டாது. 6. மாறுதல் கோரும் பகுதி நேரப் பயிற்றுநர்கள், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சார்ந்த தலைமையாசிரியரிடம் 20.12.2024-க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவு செய்தபிறகு EMIS இணையதளத்திலிருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நகலைத் தலைமையாசிரியர் சார்ந்த மாவட்டத் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 7. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் 1 மற்றும் 2, APO ஆகியோர் உள்ளடக்கிய குழு, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை 24.12.2024 பிற்பகல் 5.30 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட குழுவினர் பகுதி நேரப் பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை முறையாக பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.

8. பகுதி நேரப் பயிற்றுநர்களின் தரவுகள் EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

9. மேலும், மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், வரிசை எண்.7-இல் குறிப்பிட்டுள்ள குழுவானது மாநிலத் திட்ட இயக்ககத்திலிருந்து அனுப்பும் சுற்றறிக்கையின் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும்.

10. 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விருப்ப மாறுதல் வழங்கப்படும்.

11. ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணி மாறுதல் கோரினால் கீழ்க்குறித்த தரவுகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். I. முன்னுரிமை:

1. "முற்றிலும் கண் பார்வையற்றவர்",

2. "மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்) 3. "மனவளர்ச்சி குன்றிய/மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்" 4. "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இருதய அறுவை சிகிச்சை / புற்று நோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டோர்.

5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள்

6. கணவர் / மனைவியை இழந்தவர்"

II. பகுதி நேரப் பயிற்றுநராக பணியில் சேர்ந்த நாள்:

III. பகுதி நேரப் பயிற்றுநர் பிறந்தநாள்:

(முன்னுரிமை கூறும் விவரங்கள் தவறு என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்).

இணைப்பு: பகுதி நேரப் பயிற்றுநர்களின் பணிமாறுதல் விண்ணப்பப் படிவம் (EMIS தளத்தில்)

CLICK HERE TO DOWNLOAD part time teachers transfer 2024 - PDF

No comments:

Post a Comment

Post Top Ad