Southern Railway to run special trains to Tiruvannamalai on the occasion of Karthigai Deepam - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, 10 December 2024

Southern Railway to run special trains to Tiruvannamalai on the occasion of Karthigai Deepam

Responsive Ads Here
IMG_20241210_184015_760


கார்த்திகை தீபத்தையொட்டி தெற்கு இரயில்வே சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Southern Railway to run special trains to Tiruvannamalai on the occasion of Karthigai Deepath Special trains to Tiruvannamalai on the occasion of Karthigai Deepath

ஆண்டுதோறும் திருக் கார்த்திகையை முன்னிட்டு, திருவண்ணமாலை அண்ணாமலையார் கோயிலில் மகர ஜோதி ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதுமின்றி, நாடு முழுவதுமலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து மகிழ்வர். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம், வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தற்போது தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 இரயில்களும், திருச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு சிறப்பு இரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

*விழுப்புரம் - திருவண்ணாமலை :* * இரயில் எண் 06130 விழுப்புரத்தில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவேக இரயிலானது, காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

* இரயில் எண் 06145 விழுப்புரத்தில் இருந்து வருகின்ற 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. * விழுப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த இரயில்களானது வெங்கடேசபரம், மாம்பலப்பட்டு, அய்யந்துர், திருக்கோயிலூர், ஆதிச்சன்னூர், அண்டம்பாலம், தண்டரை வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.

* இரயில் எண் 06129 திருவண்ணாமலையில் இருந்து வருகின்ற 13, 14, 15 ஆகிய தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*திருச்சி - திருவண்ணாமலை :*

* இரயில் எண் 06147 திருச்சியில் இருந்து வருகின்ற 13 ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இரயிலானது, திருவண்ணாமலை வழியாக மதியம் 2.50 மணிக்கு வேலூர் இரயில் நிலையம் சென்றடையும்.

* திருச்சியில் இருந்து புறப்படும் இந்த இரயிலானது, திருவெறும்புதூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், மயிலாடுதுறை, கும்பகோணம், வைத்தீஸ்வரன், சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர் வழியாக வேலூர் சென்றடையும். * இரயில் எண் 06148 வேலூரில் இருந்து வருகின்ற 13 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு திருச்சி சென்றடையும்.

தீபத்திருவிழா நிச்சயம் நடைபெறும்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை - கிரிவலம் மலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழா நிச்சயம் நடைபெறும்.

450 கிலோ நெய்யும், 300 கிலோ கொப்பரையும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்படவுள்ளது.

-சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு !

No comments:

Post a Comment

Post Top Ad