UGC NET December 2024 - Today is the last day to apply for the UGC NET exam - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 11 December 2024

UGC NET December 2024 - Today is the last day to apply for the UGC NET exam

Responsive Ads Here
UGC%20NET%20December%202024%20-%20Today%20is%20the%20last%20day%20to%20apply%20for%20the%20UGC%20NET%20exam


நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்!

தேசிய தேர்வு முகமையினால் 85 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு (UGC NET December 2024) நடத்தப்படுகிறது.

கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வான இத்தேர்வு நடத்தப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்தில் இத்தேர்வு நடைபெறும். டிசம்பர் மாத தேர்வின் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 10-ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அதன்படி, இன்று (11.12.2024) இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம். UGC-NET தேர்வு என்றால் என்ன?

யுஜிசியின் விதியின்படி, கல்லூரி உதவி பேராசியர் பணிக்கு தகுதித் தேர்வாக யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. சமீபத்தில் கூடுதலாக பிஎச்.டி எனும் ஆராய்ச்சி படிப்பில் சேரவும் இத்தேர்வு தகுதித் தேர்வாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சி படிப்பில் ஜேஆர்ஃப் என்னும் கல்வி உதவிதொகையை பெறவும் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்.

இந்த தேர்வு 2025 ஜனவரி மாதம் 1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு அட்மிட் கார்டு பின்னர் வெளியிடப்படும். தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1,150, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ.325 செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி?

படி 1 : யுஜிசி- நெட் டிசம்பர் மாத தேர்விற்கு https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2 : அதில் ” UGC-NET Decemeber-2024: Click Here to Register/Login” என முகப்பு பக்கத்தில் இடம்பெற்று இருக்கும்.

படி 3 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து, ஒரு புதிய பக்கம் திறக்கும்.

படி 4 : அதில் New Candidate Register Here என்று இருக்கும். அதில் உங்களின் ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டையின் தரவு உள்ளிட்டு ஒடிபி கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

படி 5 : தொடர்ந்து, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேர்வர் பெயர், முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி, கல்வித்தகுதி, மதிப்பெண்கள், எந்த பாடத்திற்கு தேர்வை எழுதிகிறீர்கள் உள்ளிட்ட தகவலை உள்ளிடவும்.

படி 6 : இறுதியாக தேர்விற்கான கட்டணத்தில் செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

யுஜிசி - நெட் தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது தேர்வர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டால், 011- 40759000 / 011 - 6922770 அல்லது ugcnet@nta.ac.in என்ற இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

பாட வாரியாக தேர்வு தேதிகள், அட்மிட் கார்டு உள்ளிட்டவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad