அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 January 2025

அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



The Director of School Education has ordered efforts to teach Tamil to children from the northern states studying in government schools! - அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பொருள்:

பள்ளி கல்வி -வடமாநிலத்தவர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் - எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த விவரம் தெரிவித்தல்-சார்ந்து.

பார்வை:

சென்னை-9,தலைமைச்செயலகம்,பள்ளிக்கல்வி துறை,கடித 11361/5/2024-1,26-11-2024.

பார்வையில் காணும் கடிதத்தில் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும்,மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும்,வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும்,அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DSE - Encourage to Study Tamil - Proceedings -

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here