Inservice Training முகாமை வேறு தேதிக்கு மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை
சென்னை மாவட்டத்தில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள Inservice Training முகாமை திருப்புதல் தேர்வு நடைபெறும் காரணத்தினால் வேறு தேதிக்கு மாற்றிவைக்க வேண்டி இயக்குநர் ,இணைஇயக்குநர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை சென்னை மாவட்டத்தில் அறிவியல் பாடம் போதிக்கும் -அறிவியல் பட்டதாரி / இடைநிலை ஆசிரியர்களுக்கு 20.01.2025 முதல் 24.01.2025 வரை நடத்தப்படும் Inservice Training- பயிற்சி முகாமில் இருந்து 22 மற்றும் 23.1.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்குமாறு வேண்டுதல் - சார்ந்து. தற்போது பள்ளிகளில் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வுகள் 27.01.2025 அன்று முடிவடைகின்றன. 21.01.2025 அன்று திருப்புதல் தேர்வு கணிதப் பாடத்திற்கு நடைபெறுகிறது. 22.01.2025 அன்று எந்த தேர்வும் இல்லை. பிறகு 23.01.2025 அன்று அறிவியல் பாடத்திற்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. ஆகவே அறிவியல் பாடம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - தங்களின் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் 22.01.2025 அன்று தங்களின் முழுக்கவனத்தையும் மாணவர்களின் மீது செலுத்துவார்கள். மறுநாள் 23.01.2025 அறிவியல் பாட முதல் திருப்புதல் தேர்வு. இந்த சூழ்நிலையில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தில் Inservice Training பயிற்சி முகாம் நடத்துவது சரியா என்று நீங்களே சொல்லுங்கள். ஆகவே மேற்கூறிய அறிவியல் Inservice Training முகாமை தள்ளி வையுங்கள். அல்லது 10ம் வகுப்பிற்கு அறிவியல் பாடம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்காவது மேற்கூறிய அறிவியல் Inservice Training முகாமில் 22.01.2025 மற்றும் 23.01.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment