பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாற்றம் - புதிய ஆசிரியர்களுடன் மீண்டும் திறப்பு - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 12 February 2025

பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாற்றம் - புதிய ஆசிரியர்களுடன் மீண்டும் திறப்பு

பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாற்றம் - புதிய ஆசிரியர்களுடன் மீண்டும் திறப்பு All school teachers changed - reopening with new teachers -

பர்கூர் அருகே 8ம் வகுப்பு மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பள்ளி, நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே 8ம் வகுப்பு படித்து வரும் 13வயது மாணவி, பள்ளி ஆசிரியர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார்.

இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, 5ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து 7ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாவட்ட எஸ்பி தங்கதுரை, கல்வி அலுவலர்கள் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, 8ம் தேதி கலெக்டர் தினேஷ்குமாரை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட 23பேர் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததையடுத்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், பள்ளியின் உள்ளே மற்றும் வெளியே 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இப்பள்ளியில் பணிபுரிந்து வந்த அனைத்து ஆசிரியர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று வேறு பள்ளியில் இருந்து 7 பெண் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து 5 நாட்களுக்கு பின் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர். பள்ளியில் 140 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் நேற்று 80பேர் வந்திருந்தனர். பள்ளி இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ஓரிரு நாளில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவார்கள் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலர்கள் மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினர். பள்ளியின் முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here