ரூ.1 கோடி வரை கடனுதவி - முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 February 2025

ரூ.1 கோடி வரை கடனுதவி - முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Loan assistance of up to Rs. 1 crore - You can apply for the Chief Minister's Saving Hands Scheme from today - முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.


இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும்.

இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இத்திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here