அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவிப்பு! - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 24 February 2025

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவிப்பு!

Responsive Ads Here
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!


Tamil Nadu Government Employees and Teachers Welfare Federation announces that it will not participate in the casual leave strike by government employees and teachers! - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடைபெறுவருவதால் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்று அறிவித்து இருக்கின்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் பங்கேற்காது - நிறுவனத் தலைவர் சா.அருணன்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வர அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது அதாவது இந்த காலம் மாணவர்களின் இறுதி தேர்வின் இறுதிகட்டம் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்கனவே செய்முறை தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வும் நடைபெற்று வருகிறது ஆதலால் இன்று நடைபெறும் தெற்செயல் விடுப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள. நல கூட்டமைப்பு பங்கேற்காது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒவ்வொரு முன்னெடுப்பால் தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள், மலும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஒவ்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறை படுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பாதுகாவலராக திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் என்பதை பறைச்சாற்ற வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாட்டை காட்டிலும் அனைத்து வகையிலும் பின் தங்கிய மாநிலங்களான ராஜஸ்தான் ஜார்கண்ட் போன்ற மாநிங்களிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்துவதால் இந்த சுமையும் பெருமளவில் இருக்காது என்பதை நினைவுப்படுத்துகிறோம்

5caa8411-8264-4026-9249-5ab12befb6b0

No comments:

Post a Comment

Post Top Ad