CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கு - அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 21 February 2025

CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கு - அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

High Court orders government to file response in CPS scheme gratuity case. - CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கு - அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...

தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற எனக்கு ஈட்டிய விடுப்பு, சிபிஎஸ் வைப்பு நிதி தொகை மட்டுமே ஓய்வின் போது வழங்கினர். எனது பணி காலத்திற்கான பணிக்கொடை வழங்கவில்லை.

அதனால் தமிழ்நாடு அரசு நிதித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களிடம் பணிக்கொடை கோரி விண்ணப்பம் செய்தும் பதில் ஏதும் இல்லாததால், பணிக்கொடை வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசின் பதில் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் வழங்க நீதியரசர் திரு. பட்டு தேவானந்த் அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here