தமிழ்நாட்டில் பிப்ரவரி 4,5,6 தேதிகளில் நடைபெற்றது SLAS தேர்வு அல்ல நீட் தேர்வின் ஒத்திகை நடைபெற்றுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கள ஆய்வு செய்ய முன்வருவாரா..? - AIFETO - நாள்: 07.02.2025 - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 7 February 2025

தமிழ்நாட்டில் பிப்ரவரி 4,5,6 தேதிகளில் நடைபெற்றது SLAS தேர்வு அல்ல நீட் தேர்வின் ஒத்திகை நடைபெற்றுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கள ஆய்வு செய்ய முன்வருவாரா..? - AIFETO - நாள்: 07.02.2025

Responsive Ads Here
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%204,5,6%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20SLAS%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B3%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%20-%20AIFETO%20-%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%2007.02.2025


தமிழ்நாட்டில் பிப்ரவரி 4,5,6 தேதிகளில் நடைபெற்றது SLAS தேர்வு அல்ல நீட் தேர்வின் ஒத்திகை நடைபெற்றுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கள ஆய்வு செய்ய முன்வருவாரா..? - AIFETO - நாள்: 07.02.2025 The rehearsal of the NEET exam, not the SLAS exam, was held in Tamil Nadu on February 4,5,6. Will the Minister of School Education come forward to conduct a field inspection..? - AIFETO - Date: 07.02.2025

*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*

*மாநில அளவில் நடைபெற்றது அடைவு திறன் தேர்வு அல்ல. இன்னொரு நீட் தேர்வுக்கு ஒத்திகை பார்த்துள்ள வினாத்தாள்கள். மாணவர்களின் கல்வித்திறனை சோதித்துப் பார்க்கும் தேர்வு அல்ல. தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை சோதனை செய்துள்ள தேர்வாகவே உள்நோக்கத்துடன் செய்துள்ளார்கள்.*

*கல்வி சிறந்த தமிழ்நாட்டில் சோதனையை ஏற்படுத்திய இந்த தேர்வின் அபாயம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் செய்திகளை கொண்டு போய் சேர்க்கின்ற கடமை நமக்கு உள்ளது.*

*திருச்சியில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டிற்கு பெருமைகளை சேர்த்துள்ளார்கள் என்றால் மிகையாகாது.* *விலை உயர்ந்த வெள்ளி யானை பரிசினை மேதகு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பாராட்டி வழங்க இருப்பதாக இந்திய அளவில் அறிவித்துள்ளார்கள். இரண்டாம் தேதி நிறைவு விழாவில் கலந்து கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நாம் பெற்றுள்ளதால் பெருமை கொள்கிறோம். இந்தப் பெருமையெல்லாம் காண்பதற்கு அவருடைய தந்தையார் என்னுடைய சகோதரர் பொய்யாமொழி இல்லையே என்ற கவலை இருந்தது. ஆனால் அவர் இடத்திலிருந்து நான் பெருமை கொள்கிறேன் என்று பேசி உள்ளார்கள். இது போன்று தொடர்ந்து பலமுறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.*

*பெற்றோர்களை கொண்டாடுகிற நிகழ்வு, கனவு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி எல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு பெருமையினை கொண்டு வந்து சேர்த்துள்ளது.*

*கல்வித்துறையில் கள ஆய்வை செய்கிற போது விமர்சனங்கள் அடுக்கடுக்காக பெருகி வருவதை கேட்க முடிகின்றது.*

*மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வினை நடத்துவது போலவும், நீட் தேர்வினை நடத்துவது போலவும் எதிர்பார்க்காத, எளிதில் எழுத முடியாத பல கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள். ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் நான்கு விதமான வினா தாள்களை கொடுத்து விடை அளிக்க செய்துள்ளனர். கற்பனை உலகில் மிதந்து வருகிறார்கள்.*

*பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தாதவர்கள் , மாணவர்களின் கற்றல் கொள் திறன் பற்றி அறியாதவர்கள் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் .ASAR அறிக்கையை விட இந்த விடைத்தாள் முழுவதையும் திருத்தி சோதித்துப் பார்க்கிற போது உண்மைத் தன்மையுடன் வெளிவருமேயானால் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாடு கல்வித்துறையை பற்றி என்ன தரம் தாழ்த்தி பேசி வருகிறாரோ அதற்கு வலு சேர்க்கும் அபாயமாக தான் அமைய உள்ளது. சில கல்வித்துறை அதிகாரிகள் நாம் என்னதான் நீட் தேர்வை எதிர்த்தாலும் இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் மத்திய அரசின் கல்விக் கொள்கையை திணிப்பதில் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.* *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வினாத்தாள் தயாரித்தவர்களை இதை வெளிக்கொண்டு வந்தவர்களை இனம் கண்டு களை எடுக்க வேண்டுமாய் பொது நோக்கங்கள் வலியுறுத்துகிறோம்.*

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 234 தொகுதிகளிலும் பள்ளியினை பார்வையிட்டு வந்திருக்கிறீர்கள் என்பது எதார்த்தமான உண்மையாகும். ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் என்ன தான் நடக்கிறது என்று சில நிமிடமாவது தெரிந்து கொண்டு செயல்பட அக்கறை உணர்வுடன் வேண்டுகிறோம்.*

*எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத ஒரு கல்வி அமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள். ஆசிரியர் சங்கங்களும் இதே கேள்வியை கேட்டு வீதியில் போராடி வருகிற போது நெஞ்சு பொறுக்குதில்லையே..! அக்கறை உணர்வுடன் வேண்டுகிறோம்..! ஆய்வு செய்யுங்கள்..! தீர்வு காண முன் வாருங்கள்..!*

*அஞ்சா நெஞ்சர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த அன்பிலார் பேரன் என்கிற வரலாற்று பதிவில் நாங்களும் நிலைத்து நின்று வருகிறோம். விளம்பரத்தால் வரும் விளம்பரத்தை விட உண்மைத்தன்மை அறிய பாடுபடுவோம்.*

*அரசின் மீதும் கல்வித்துறையின் மீதும் அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்த தலைவர்,*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*

No comments:

Post a Comment

Post Top Ad