பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 7 February 2025

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை

Request to provide cash benefits to retirees - பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை


பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென, சத்துணவு பணியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியம், வால்பாறை நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் லில்லிஹில்டா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வால்பாறை ஒன்றியத்தின் பொறுப்பாளராக சோபியா, செயலாளராக தேவகுமாரி, பொருளாளராக பேபி, ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு சிரமத்திற்கு இடையே பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here