ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 3 February 2025

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிர்க்க மீண் டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபி எஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கி ணைப்பாளர் பி.பிரெடெரிக் எங் கெல்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் கடந்த 2004-ஆம் ஆண்டு புதிய ஓய் வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட் டது.

ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை புதிய ஓய்வூதி யத் திட்டத்தில் இணையவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட் டன. நாடு முழுவதும் புதிய ஓய்வூ தியத் திட்டத்தில் பணியாற்றி உயி ரிழந்த, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்களின் விவரங்கள் குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்தது.

இதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுப் பணியாளர்களில் 3,109 பேர் உயி ரிழந்தனர். 35,892 பேர் பணி ஓய்வு பெற்றிருக்கின்றனர். இதேபோல, மாநில அரசு ஊழியர்களில் 39,301 பேர் உயிரிழந்தனர். 104,838 பேர் பணி ஓய்வு பெற்றிருக்கின்றனர். இந்த விவரப் பட்டியலில் தமிழ் நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத் தில் இதுவரை ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று, மேம்பாட்டு ஆணையத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்ப டுத்தாமலும், நிதி மாற்றம் செய்யாம லும் உள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பே ரவைக் கூட்டத் தொடரின்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத் தில் தமிழ்நாடு அரசு இணைவது குறித்து குழு அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். 2019 ஏப்ரல் முதல் மத்திய, மாநில அர சுகளின் பங்களிப்புத் தொகை 10லிருந்து 14 சதவீதமாக உயர்த்தப் பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை பங்களிப்புத் தொகையை உயர்த்தவில்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந் தால், ஆண்டுக்கு ரூ.7ஆயிரம்கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாட் டில் 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ தியத் திட்டத்தில் பணிபுரிந்து வரு கின்றனர்.

எனவே, தேர்தல் வாக்குறுதிப் படி மீண்டும் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த தமி ழக முதல்வர் முன் வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here