JACTTO GEO போராட்டத்திற்கு ஆதரவாக - 25.02.2025 அன்று SSTA இயக்கமும் போராட்டம் அறிவிப்பு !! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 February 2025

JACTTO GEO போராட்டத்திற்கு ஆதரவாக - 25.02.2025 அன்று SSTA இயக்கமும் போராட்டம் அறிவிப்பு !!



JACTTO GEO போராட்டத்திற்கு ஆதரவாக - 25.02.2025 அன்று SSTA இயக்கமும் போராட்டம் அறிவிப்பு !!

அன்பார்ந்த SSTA இயக்க உறவுகளுக்கு...!!!

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற பிப்ரவரி 25 ம் நாள் மறியல் போராட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளது

நமது ஒற்றைக் கோரிக்கையான 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வென்றெடுக்க நாம் மிக கடுமையான போராட்டங்களை எடுத்து வரும் நிலையில் மற்றொரு கூட்டு போராட்டம் தோல்வி அடைய நாம் காரணமாக மாறிவிட கூடாது என்ற சிந்தனையில் SSTA இயக்கம் இம்முடிவை அறிவிக்கிறது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகளுக்காக நமது SSTA இயக்கத்தின் சார்பாக பிப்ரவரி 25 ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டத்தினை நடத்திடுவோம்.

"இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்" என்னும் வள்ளுவரின் வரிக்கிணங்க ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு நாம் என்றுமே எதிரி கிடையாது..

கடந்த 2017 கால கட்டங்களில் நாம் ஜாக்டோ ஜியோவில் இருந்து மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததின் விளைவாக ஏழாவது ஊதிய குழுவை பெற்றோம்.

ஆனால் அதன் பின்பு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை பத்தோடு பதினொன்றாக கேட்பாரின்றி விடப்பட்டதின் காரணமாக தனியாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்த போதும் 2019 இல் ஒருங்கிணைந்த போராட்டம் நடந்த போது நாம் பள்ளி செல்லவில்லை, போராட்டத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, நமது கோரிக்கை இடம்பெறாத நிலையிலும் நாம் போராட்டத்தில் கலந்து கொண்டு 76 நமது இயக்க ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாம் எப்போதும் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு விரோதமாக இருந்ததில்லை. அவர்கள் நமக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ ? இல்லையோ ? நாம் நம் இனத்தின் ஆகச் சிறந்த போராளிகள்.. இன்றைக்கும்... என்றைக்கும்...

நாம் போராளிகள் தான்... அதனை எவராலும் மாற்றவும் முடியாது, மறைக்கவும் முடியாது,மறுக்கவும் முடியாது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆகச்சிறந்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வரலாற்றில் இடம்பிடித்த சமரசமற்ற போராளிகள் நாம் , தற்போது நடைபெறும் கூட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

போராடும் கோடி கரங்களில் நமது இரும்பு கரமும் கூடி அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கோரிக்கைகள் வெல்ல SSTA வின் பங்களிப்பு இருக்கும்.

தகவல் பகிர்வு

ஜே.ராபர்ட்

SSTA-மாநில தலைமை

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here