கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் சார்ந்து DSE செயல்முறைகள்! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 24 April 2025

கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!



கோடை விடுமுறையில் மாணவர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

பார்வை (1) இல் கண்டுள்ள அரசாணையின்படி, "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஜீன் மாதம் துவங்கி நாளது வரை அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் புதிய பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 7 வயது வரையுள்ள மாணவர்களுக்கு முதலாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்ப்பித்தல், முதலாவது புதுப்பித்தலை மேற்கொள்ளத் தவறிய 8-14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் 15-17 வயதுள்ள மாணவர்களுக்கு இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருப்பின், அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் மூலம். கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்படவுள்ள சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் தங்களது புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஆணை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறான முனைப்பு நடவடிக்கையின் மூலம். பள்ளித் திறப்பின்போது அனைத்து மாணவர்களும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொண்டு தகுதியுள்ள ஆதார் எண்களை வைத்திருப்பதை உறுதி செய்ய முடியும். இதன் வாயிலாக மாணவர்களுக்கு உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகையினை தடையின்றி வங்கிக் கணக்குகளை துவக்கிட இயலும்.

பள்ளி இறுதி வேலை நாளுக்கு முன்பாக வகுப்பாசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும். மேலும் இக்கல்வியாண்டில் புதிதாக பள்ளியில் சேர்க்கை வழங்கிடும் மாணவர்களிடமும், பள்ளியில் சேரும்போதே இப்பணியினை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் துவக்குதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல் போன்ற பணிகள் காலதாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்திட இயலும் என்பதை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தலைமை ஆசிரியர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அவர்களுடன் ஒருங்கிணைந்து வட்டார வளமையத்தில் முகாம் நடைபெறும் விவரங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உத்தேச கால அட்டவணை (Tentative Schedule) முன்னதாக தெரியப்படுத்திடும் வகையில் உரிய உத்தேச கால அட்டவணையினை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஆணையாக வழங்கிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை). மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆகியோர்களுக்கு உரிய தகவல்களை தெரிவித்திடவும், நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முகாம் நடைபெறும் காலங்களில் ஆய்வு அலுவலர்கள் கண்காணித்திடவும் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. இப்பொருள் சார்பாக வழங்கப்பட்ட ஆணையின் நகலினை இவ்வலுவலகத்திற்கு உடன் அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here