அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு T-shirt, வெள்ளி நாணயம் பரிசு! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 24 April 2025

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு T-shirt, வெள்ளி நாணயம் பரிசு!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு T-shirt, வெள்ளி நாணயம் பரிசு!


அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு திருப்பத்தூரில் அசர வைக்கும் விளம்பரம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கி நடந்து வரு கிறது. அதன்படி தனியார் மற்றும் அரசு பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஊர், ஊராக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விளம் பரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளி நுழைவு வாயிலில் விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் அடுத்த கல்வி ஆண் டுக்கு 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. சிறப்பு சலுகையாக 6ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம், ஒரு டி-சர்ட் வழங்கப்படும். மேலும் . 6 ஆம் வகுப்பில் சேரும் மானாவர்களுக்கு வெள்ளி நாணயம் ஒன்று வழங்கப்படும்

T.சர்ட் ஒன்று வழங்கப்படும்

இலவச சுற்றுலா அழைத்து செல்லப்படும்

100% Results

திருப்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டு உள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பு பேனர்.

அதேபோல் வார விடு முறை நாட்களில் தமிழக அரசு மூலம் பரதம், வாய்ப் பாடு, சிலம்பம், ஓவியம் ஆகியன கற்றுத்தரப்படும். வாலிபால் மற்றும் செஸ் விளையாட்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பள்ளி. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம் பெற்று உள்ளது. இந்த பேனரை பார்த்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த விளம்பர பதாகையை பொது மக்கள் ஆர்வமாக பார்த்து படித்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here