முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் - ஜாக்டோ-ஜியோ சார்பில் வரவேற்று அறிக்கை - Joint Action Council of Tamilnadu Teachers Organisation and Government Employees Organisation
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் ஜாக்டோ-ஜியோ சார்பில் வரவேற்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர்கள் நலன் காக்கும் விதமாக வெளியிட்டுள்ள 9 அறிவிப்புகளான ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் சரண் செய்து பணப்பயன் 01.10.2025 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறுவிடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.
மேலும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான முன்பணம் 1,00,000/- மற்றும் 50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகிய அறிவிப்புகளை ஜாக்டோ ஜியோ சார்பாக வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் ஜாக்டோ-ஜியோ சார்பில் வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர்கள் நலன் காக்கும் விதமாக வெளியிட்டுள்ள 9 அறிவிப்புகளான ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் சரர் செய்து பணப்பயன் 01.10.2025 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறுவிடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாலர் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம். மேலும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான முன்பணம் 1,00,000/-மற்றும் 50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகிய அறிவிப்புகளை ஜாக்டோ ஜியோ சார்பாக வரவேற்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேற்கலர்ட அறிவிப்புகளை வரவேற்கும் ஜாக்டோ-ஜியோ கீழ்கண்ட எங்களின் வாழ்வாதார கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90% க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எனர்.243, நாள்: 21.02.2023 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் அரசானை எர்.76, நாள்: 30.09.2024 ஆகிய இரண்டையும் ரத்து செய்திட வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்
சிறப்பு காலமுறை வஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், நகராட்சி செயலாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புறவுப்பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவப்பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை நியமனத்தை மீண்டும் 25 விழுக்காடு உயர்த்த வேண்டும்.
இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணி ஓய்வுகாலத்திற்கு பின்னர் வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வாழ்வாதார கோரிக்கையான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல்கால வாக்குறுதியான பழைய பயனளிப்பு ஒய்வூதியத் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ-ஜியோ நம்பிக்கையோடு வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment