Aided Schools - பணி நிரவல் ஆசிரியர்கள்களை மாற்றுப்பணியில் இருந்து விடுவிக்க கூடாது - DEO Proceedings
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01-08-2023 ன் படி உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டு பணி நிரவல் என்ற அடிப்படையில்
மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாற்றுப்பணியில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அவர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது -திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )
பார்வை:
தொடக்கக் கல்வி திருவண்ணாமலை கல்வி மாவட்டம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் (30.04.2025) அன்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் பணியில் சேர அனுமதித்து உத்திரவிடல் சார்பாக 1) தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை ந.க.எண்.19428/ஜெ2/2024. நாள் 23.04.2025
2) திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.1968-ஆ4/2024,நாள்.07.06.2024
பார்வையில் குறித்துள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதி வேலை நாள்.30.04.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தேவை காரணமாக வேறு பள்ளிகளில் இருந்து வந்து மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை மீண்டும் ஏற்கனவே பணிபுரியும் பள்ளியில் பணியில் சேரும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை மாற்றுப்பணியிலிருந்து விடுவித்து உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாய் பள்ளிகளை சார்ந்த தலைமையாசிரியர்கள் மாற்றுப்பணியில் பணிபுரிந்து திரும்பும் ஆசிரியர்களை மீளவும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிபடுத்திக்கொள்ளவும் தலைளமயாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 0108.2023 நிலவரப்படி உபரிஆசிரியர் என கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் மாற்றுப்பணியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மாற்றுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டு மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை மாற்றுப் பணியில் இருந்து விடுவிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment