மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்களை 2025-26 - ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளிலிருந்தே அனைத்து பள்ளிகளிலும் மேம்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பார்வையில் கண்டுள்ள அரசாணை நகல் உரிய இணைப்புகளுடன் மென் பிரதியாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) சார்பு செய்யப்படுகிறது . அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி , மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம் , மாதம் , வாரம் மற்றும் வகுப்பு வாரியாக குறிப்பிடுப்பட்டுள்ள பொருண்மைகளை 2025-26 - ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளிலிருந்தே அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment