அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி
ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி
16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு 46 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்திவழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் துக் கொள்கிறேன் - நிறுவனத் தலைவர் - சா.அருணன்
16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி ஒரு முத்தான அறிப்பை அறிவித்துள்ளார்கள் அதாவது எப்போதெல்லாம் ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அதே தேதியிட்டு வழங்குவேன் என்ற உத்தரவாத்தை அளித்திருந்தார் இது எதனை காட்டுகிறது என்றால் சொல்வதைதான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் என்ற தாரக மந்திரத்தை நிலைநிறுத்துவதாகும்
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையன புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment