*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களுடன் நமது பயனுள்ள சந்திப்புகளும் பெற்றுள்ள தகவல்களும்..*
*AIFETO... 04.03.2024..*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:-36/2001.*
*02.03.2024 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் சந்தித்து தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு பொதுக் கோரிக்கைகள் தனியாசிரியர் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்கள்.*
*இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பாக தொடர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அழைத்துப் பேசி செய்ய முடிந்தவற்றை நாம் அறிவித்திருக்கலாம். என்று நாம் வலியுறுத்தினோம்!.*
*சென்றமுறை போராடிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நேரில் அழைத்துப் பேசினார்கள். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும் நேரில் அழைத்துப் பேசினார்கள். சமவேலைக்கு சமஊதியம் என்பதில் பிரச்சனை இருக்கிறது. அனைத்து சங்கங்களின் கருத்துக்கைகளையும் கேட்ட பிறகு ஒரு முடிவுக்கு வருவோம். போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த அறிவிப்பிற்குப் பிறகும் சென்ற முறையும் போராட்டத்தை நடத்தினார்கள்.*
*பிப்ரவரி 19, 2024 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய தொடங்கியதில் இருந்து போராட்டத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தவுடன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு எந்த அறிவிப்பையும் இந்த அரசு வெளியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூட்டமைப்புகள் போராட்டங்களை எல்லாம் ஒத்திவைத்து விட்டார்கள். ஆனால் இவர்கள் மட்டும் பிடிவாதமாக போராடி வருகிறார்கள்.*
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குச் செல்லுங்கள் என்று ஒரு கனிவான வேண்டுகோள் செய்தி அறிக்கையினை வெளியிட்டு இருந்தார்கள். அதனைப் பயன்படுத்தியாவது இவர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை வைத்துதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும்.*
*அத்துடன் இல்லாமல் அந்த சங்க தலைவர் போராட்டத்தில் பேசிய பேச்சுக்கள் பொறுத்துக் கொள்ளவே முடியாத பேச்சுக்களாகும். சந்திக்காத பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை சந்தித்ததாக பேசினார்.. என்பது மட்டுமல்லாமல், எனது கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கினார் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் என்றெல்லாம் பேசினார்கள்.*
*முதலமைச்சர் அவர்கள் எதிர் கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய காணொளி காட்சியை போட்டு அப்போது பேசியது நல்ல வாய்... இப்போது பேசி வருவது நாற வாய்?.. என்று தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இவையெல்லாம் அரசின் கவனத்திற்கு சென்ற பிறகுதான் பிடிவாதம் ஆகிவிட்டார்கள்.*
*நீங்களும் சமரசமாக பேசிப் பார்த்தீர்கள்!. அதை உணர்ந்தவர்களாய் தெரியவில்லை. அவர்கள் பள்ளிக்குச் செல்லாத நாட்களுக்கு ஊதிய பிடித்தம்தான் செய்வார்கள். நமக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. இனி முடிவு எடுக்க வேண்டியது அந்த சங்கத் தலைவர்கள் தான்!. என்ற முடிவுக்கு நாமும் வந்து விட்டோம்.*
*நமது பிரச்சனைகள்:-*
*அண்ணன் ஐபெட்டொ அவர்கள் அரசாணை எண் 243 க்கு ஒரு முடிவு கட்டாத வரையில் நீங்கள் கலந்தாய்வினை நடத்த கூடாது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் தெரிவித்து விடுங்கள்!. நாங்களும் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்து விடுகிறோம்!. அரசாணை 243 ஐ பின்பற்றி மாறுதல் கலந்தாய்வு நடத்துவீர்களேயானால் நானே களத்தில் முன்நின்று கலந்தாய்வு நடத்த விடமாட்டேன்.. தமிழக ஆசிரியர் கூட்டணியைப் பொறுத்தவரையில் எந்த விளைவையும் ஏற்க தயாராக உள்ளோம்!.. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முன்னுரிமை பட்டியல் முன்பே வெளியிட்டு விட்டீர்கள். இப்போது தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணி நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறக்கூடியவர்களுடைய முன்னுரிமை பட்டியலை கேட்டு செயல்முறைகள் வெளியீட்டு உள்ளீர்கள்!.*
*உச்சநீதிமன்ற தீர்ப்பு வருகிறவரையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மாறுதல் கலந்தாய்வு நடத்த மறைமுகமாக திட்டமிட்டால் தமிழக ஆசிரியர் கூட்டணியைப் பொறுத்தவரையில் அரசாணை 243 ஐ எதிர்த்து மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் களம் காண்பதற்கும்... எந்த தண்டனையினையும் ஏற்றுக் கொள்வதிலும் பெருமிதம் கொள்வோம்!.. என்று தெளிவுபடுத்திக் கூறினோம்.*
*தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உட்கார்ந்து பேசி யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு முடிவுக்கு வருவோம்.. என்று உறுதி அளித்தார். இப்பிரச்சினையினை தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார். என்பதை அவருடன் சந்தித்துப் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டோம்..*
*பள்ளிக்கல்வி அமைச்சகம் பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவே... மூச்சுக்காற்று வெளிவந்து கொண்டிருக்கிறது.*
*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை தர ஊதியம் ரூ 5400/- நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து வழங்கப்படுவது அரசாணைப்படி சரிதான் என்பதை ஒப்புதல் அளித்து நிதித்துறையில் இருந்து தெளிவுரை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே நாம் பெற்ற அரசாணை தான் இது. இது ஒன்றும் புதிதல்ல; ஆனால் தணிக்கைத்தடை செய்யப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தணிக்கை தடை ரத்து செய்யப்பட்டு மீண்டும் தொடர வேண்டுமென தெளிவுரையினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.*
*அரசாணை நகலினை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கையில் எடுத்து வைத்துக் கொண்டுதான் பேசினார்கள். உடனடியாக ஓய்வுபெறக்கூடிய தலைமை ஆசிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாக தெரிவித்தார்கள்.*
*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது ₹ 5400/- தரஊதியம் பெற்றுக்கொண்ட பிறகு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வில் சென்றவர்களுக்கு தணிக்கைத் தடை செய்யப்பட்டுள்ளது. அது சரியானதுதான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4700 தர ஊதியம் பெற்ற தேதி முதல் நிர்ணயம் செய்து ஊதிய பாதுகாப்பு கொடுத்து ஆணை வழங்கிட வேண்டும். அப்படி வழங்கும்போது அடுத்த ஊதியக் குழுவில் நிர்ணயம் செய்கிற பொழுது மாற்றம் வரத்தான் செய்யும். முற்றிலும் அனுபவம் உள்ளவர்களை கொண்டு சட்டரீதியாகவும், பாதிப்பு இல்லாமலும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தெளிவுரை வழங்க வேண்டுமாய் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.*
*தரஊதியம் 5400 பெற்று பல நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு ஓய்வூதியக் கோப்புகள் அனுப்பப்பட்டு அனைவரும் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். ஆனால் தணிக்கைத் துறையினர் மட்டும்தான் 5400/- பெறுபவர்களுக்கு தணிக்கைத்தடை செய்கிறார்கள்... என்பதை விளக்கி கூறினோம்.*
*மதிப்புமிகு சேதுராமவர்மா அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்தபோது 100க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பாதுகாத்து ஆணை வழங்கினார்கள் என்று நாம் நினைவு படுத்தினோம்!..*
*தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நமக்கு எந்த பாதகமும் வரக்கூடாது என்று செயல்படக் கூடியவர். நாமும் விழிப்புணர்வுடன் இருந்து ஆசிரியர்களை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்துவோம் என்று உறுதி தெரிவித்துக் கொள்கிறோம்.*
*அடுத்து அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அயல் மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுவரும் பாதிப்பு காரணமாக ஈரோடு, தாளவாடி, கூடலூர், பெருந்துறை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதியினை பெற்றுத் தந்திட வலியுறுத்தினோம்.*
*அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் single Management காலிப்பணியிடங்கள் இருக்குமேயானால் அந்த காலிப்பணியிடத்தில் நிரப்புவதற்கு உடன் நடவடிக்கையும் மேற்கொள்ள கேட்டுக்கொண்டோம். Posting Approval இல்லாவிட்டால் Posting Approval அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.*
*பொறுமையாக குறித்துக்கொண்டு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தேர்வுப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு முழுமையான ஆணை வழங்குவதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.*
*பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் க.அறிவொளி அவர்களுடன் நமது இனிய சந்திப்பு...*
*அரசாணை 243 க்கு தெளிவுரை வராத வரையில் மாறுதல் கலந்தாய்வு நடத்த இயலாது என்று உறுதிப்பட அவரிடம் தெரிவித்தோம்!. அவரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நாம் உட்கார்ந்து பேசி ஒரு பாதிப்பில்லாத தெளிவான முடிவுக்கு வருவோம் என்று உறுதிபட தெரிவித்தார்கள். சில நடைமுறை மாற்றங்களை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அப்படி நடந்து கொள்ளலாமா?.. என்று கூறினார்கள். அது எதுவாயினும் மாநில முன்னுரிமை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை நாம் தெளிவுபடுத்தி சொல்லிவிட்டோம்.*
*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதிய மாற்றத்தில் உட்கார்ந்து பேசி தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ஒத்துழைப்பாக இருப்போம்... என்பதையும் தெரிவித்துக் கொண்டார்கள்.*
*தேர்வுத் துறை இணை இயக்குநர் (நிர்வாகம்) மதிப்புமிகு முனைவர் பூ. ஆ..நரேஷ், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) மதிப்புமிகு. முனைவர் த. இராஜேந்திரன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) மதிப்புமிகு ச.கோபிதாஸ், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) மதிப்புமிகு இரா.பூபதி, ஆகியோரை சந்தித்து அவரவர்கள் துறை தொடர்பான பிரச்சனைகளை நேரில் விளக்கிப் பேசினோம்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி பதாகையினை கையில் எடுத்து நாம் பெற்றுள்ள சாதனைகளை.... இழந்த உரிமைகளை... மீட்டெடுப்பதில் பட்டியலிட்டு அதை கையில் வைத்துக்கொண்டு... மீண்டும் தலைமைச் செயலகத்தை வலம் வந்து நமது இயக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமுதாயத்தை பாதுகாத்திட முடியும்!.. என்பதை நிரூபித்துக் காட்டுவோம்!.. தேர்தல் முடியும் வரை பொறுத்திருப்போம்!..*
*டிட்டோஜாக் கூட்டமைப்பின் தொடர் பணிகளில் தமிழக ஆசிரியர் கூட்டணி என்றும் போல் ஒருங்கிணைப்பிலும் முன்னணியில் நின்று செயல்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!...*
*இந்த சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் செஞ்சி ஆ.இராஜசேகர், மாநிலத் துணைச் செயலாளர் கயத்தாறு செ.கணேசன், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஐபெட்டோ பொதுக்குழு உறுப்பினர் ந.கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பெ.பா.முரளி சென்னை மாவட்டச் செயலாளர் புழல் இரா.இராஜசேகர், திருவாலங்காடு வட்டாரச் செயலாளர் ஓ.என்.பிரபு காமராஜ் ஆகியோர் உடன் கலந்து கொண்டார்கள்.*
*என்றும் உங்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்துள்ள அண்ணன்...*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. செல்:-9444212060, மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*
No comments:
Post a Comment