அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் IFHRMS மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளை களைதல் சார்பு - தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு Government Servants and Teachers Proficiency in De-risking Deduction of Income Tax through IFHRMS - National Union of Teachers-Tamil Nadu
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் IFHRMS மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளை களைதல் சார்பு.
தமிழகத்தில் IFHRMS மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதற்கு பழைய முறை /புதிய முறை என பணியாளர்களின் விருப்பம் பெறப்பட்டது. ஆனால் தற்போது பழைய நடைமுறை தேர்வு செய்தவர்களுக்கு உரிய கழிவுகள் அனுமதிக்கப்படாமல் அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
தற்போதுதான், பெரும்பாலோருக்கு பழைய முறை / புதிய முறை குறித்த புரிதல் ஏற்பட்டு உள்ளதால் மாதந்தோறும் அல்லது காலாண்டு தோறும் பிடித்தம் செய்யும் முறைகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு தரவேண்டும். பழைய நடைமுறையில் உள்ளவருக்கு HRA, சேமிப்பு உள்ளிட்ட உரிய வரிக்கழிவுகளை கழித்து, மீதம் இருக்கின்ற தொகைக்கு வருமான வரி பிடித்தம் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
சரியான முறையில் வருமான வரி செலுத்திவரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு வருமான வரி பிடித்தத்தில் உள்ள இடர்ப்பாடுகளை களைந்த பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து, வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment