தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வாக்கு பதிவு முடிந்தபிறகும் வாக்களிக்க அவகாசம் - தலைமை தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் - Time to vote for government employees teachers engaged in election work after vote registration - request to Chief Election Commissioner
தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வாக்கு பதிவு முடிந்தபிறகும் வாக்களிக்க அவகாசம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் வேண்டுகோள்
~~~~
தமிழ்நாட்டில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது , தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தபால் வாக்கு வழங்குவது வழங்குவது வழக்கமான ஒன்று பல பயிற்சி மையங்களில் தபால் வாக்கு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதை அறிய முடிகிறது இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்குகள் செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது மேலும் இந்திய முழுவதும் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று ஜூன மாதம் 4ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது அதாவது தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கைக்கு இடைவெளி 74 நாட்கள்இருப்பதால், கால அவகாசம் இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்கு செலுத்துவதை உறுதிப்படுத்த ஏற்கனவே சென்ற சட்டமன்ற தேர்தலின்போது கால அவகாசம் அளித்தது போன்று நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தபால் வாக்கினை அனுப்பி தேர்தல் முடிந்தாலும் குறிப்பிட்ட தேதியை நிர்ணயம் செய்து வாக்களிக்க உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் ஐயா அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment