*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:25.05.2024* *******
*NHIS தொடர்பாக TNPTF பங்கேற்ற பேச்சுவார்த்தை!* *******
*தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில்(NHIS) அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்துதல், NHIS திட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் மற்றும் விதி மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 03.05. 2024 சென்னை மாநிலச் செயற்குழு முடிவின்படி, 13.06.2024 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டக் கருவூல அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், 17.07.2024 அன்று சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை அலுவலகம் முன்பாக மாநில அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது .*
*இந்நிலையில் மேற்கண்ட பிரச்சனையில் நமது இயக்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று(24.05.2024) மதுரையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மண்டல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிகழ்வில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பொது மேலாளர், அந்நிறுவனத்தின் NHIS திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர்,MD India நிறுவனத்தின் NHIS திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர்,Medi Asst நிறுவனத்தின் NHIS திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இப் பேச்சுவார்த்தையில் மாநில பொதுச் செயலாளர் தோழர் ச.மயில்,மாநில துணைத்தலைவர் தோழர் மா.ஆரோக்கியராஜ்,நமது இயக்கத்தின் NHIS திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான தோழர் த.இர.செல்வ கணேசன்,மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் பெ. சீனிவாசகன் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர்.ம.சகாய தைனேஸ் ஆகியோர் பங்கேற்றனர்.*
*1 மணி 30 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த் தையில் NHIS திட்டம் தொடர்பான நம்முடைய கோரிக்கைகளை விளக்கமாக வலிமையாக எடுத்துரைத்துள்ளோம்.NHIS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்கள் சந்திக்கும் ஏமாற்றங்களையும், இழப்புக்களையும் விரிவாக எடுத்துரைத்துள்ளோம்.புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நமது போராட்டங்கள் தொடரும் என்பதையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உயர் அலுவலர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.*******
*தோழமையுடன்* *ச.மயில்* *பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment