மே மாதம் ஆசிரியர்களுடைய, மாணவர்களுடைய கோடை விடுமுறை என்பதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்
*DRPGTA 20.05.24* *நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*239/2017*
*மே மாதம் ஆசிரியர்களுடைய, மாணவர்களுடைய கோடை விடுமுறை என்பதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்*
*10 ,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடப்பு மே மாத விடுமுறையில் நடத்துவதற்கு பதிலாக வரும் ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும்*.
*மே மாத கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும்*
*நடப்பு 2024-மே மாத கோடை விடுமுறையில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் வருகை தந்த நாட்களுக்கு ஈடாக ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும்*
அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், DRPGTA
7373761517
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-6.
பொருள்:-
*மே மாதம் ஆசிரியர்களுடைய, மாணவர்களுடைய கோடை விடுமுறை என்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்*
*10 ,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடப்பு மே மாத விடுமுறையில் நடத்துவதற்கு பதிலாக வரும் ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும்*.
*மே மாத கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும்*
*நடப்பு 2024-மே மாத கோடை விடுமுறையில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் வருகை தந்த நாட்களுக்கு ஈடாக ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டுதல்*சார்பு*
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மேல்நிலை வகுப்புகளைக் கையாளும் முதுகலை ஆசிரியர்கள் ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மார்ச் மாதம் பொதுத் தேர்வுப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஏப்ரல் மாதம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ச்சியாக நடப்பு மே மாதத்தின் தொடக்கத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு, பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த உடன் பொதுத்தேர்வு தேர்ச்சி சார்ந்த பகுப்பாய்வு தயாரிக்க பள்ளிக்கு வருகை தந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த போதும் தேர்ச்சி சார்ந்த பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்க பள்ளிக்கு வருகை புரிந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்திற்காக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்வுக்காகவும், அதனோடு தொடர்புடைய கல்லூரி கனவு நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் சென்று விட்டு செல்கிறார்கள்.
தொடர்ச்சியாக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செல்பேசி எண்ணை ஓடிபி மூலம் சரிபார்க்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் செயல்முறைகள் வெளியிட்ட வெளியிட்டு இருப்பதால் இது சார்ந்த பணிகளில் ஈடுபட தலைமை ஆசிரியர்களின் கட்டாய வற்புறுத்தலின் அடிப்படையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் மாணவர் சேர்க்கை பணி, மாற்றுச் சான்றிதழ் சரிபார்ப்பு படி மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவர்களை பள்ளிக்கு அழைத்து விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முதுகலை ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் இரண்டு முதுகலை ஆசிரியர்கள் என்ற சுழற்சி முறையில் தற்போது பள்ளிக்கு வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக 10 ,11 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடப்பு மே மாத கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற நிலையை ஜூன் முதல் வாரத்தில் இருந்து நடைபெறும் என்பதை மாற்றி அமைக்க வேண்டும்.
ஏனெனில் தற்பொழுது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பெரும்பாலான மாணவர்களை செல்பேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை இருக்கிறது.
எனவே நடப்பு மே மாத கோடை விடுமுறையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும்
இதன் மூலம் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையான மே மாத விடுமுறை முற்றிலும் அடியோடு பறிக்கப்பட்டுள்ளது மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை உள்ள பணியாளர்கள் என்ற வகையில் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் அவர்களுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள் தான்...
அதே நேரத்தில் விடுமுறை இல்லாமல் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்களுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.
எனவே ஆசிரியர்களை மே மாத விடுமுறையில் பள்ளிக்கு வரவழைப்பதை பள்ளிக்கல்வித்துறை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
மேலும் ஆசிரியர்கள் 11 மாதம் கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் மன ரீதியாக உளவியல் ரீதியாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக விடப்பட்ட மே மாத கோடை விடுமுறை என்பது தற்போது முற்றிலும் இரத்து செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் அவர்களுக்கு பணிகள் என்ற நிலையை நடைமுறைப்படுத்தும் போது போது ஆசிரியர்கள் மனநிலை முற்றிலும் மாறி வருகிறது.
மேலும் மே மாதம் ஆசிரியப் பெருமக்களை பள்ளிக்கு வரவழைக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறுவதை இரத்து செய்திருப்பதை இன்னும் அமல்படுத்தாமல் இருப்பது, உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வாக்குறுதிபடி இன்னும் வழங்காமல் இருப்பது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது என நிதி சார்ந்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், கோடை விடுமுறை என்ற அடிப்படை உரிமையையும் தொடர்ந்து மறுத்து அதற்கு பதிலாக மறைமுகமாக ஆசிரியர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைக்கும் உயர் அலுவலர்களின் செயல்முறைகளால் ஆசிரியர்கள் அரசின் மீது அதிருப்தி கொள்ளும் வகையில் உத்தரவுகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே இந்த விஷயத்தில் தக்க முடிவுகள் எடுத்து மே மாதம் ஆசிரியர்களுடைய கோடை விடுமுறை காலம் என்பதை பள்ளிக்கல்வித்துறைஉறுதி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நடப்பு மே மாத கோடை விடுமுறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கட்டாய வற்புறுத்தலின் அடிப்படையில் பள்ளிக்கு வருகை தந்து பணிகளைச் செய்து கொண்டிருக்ககூடிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த தேதியில் வருகை பதிவேட்டில் கையொப்பமிட அனுமதித்தும், எத்தனை நாள் வருகிறார்களோ அதற்கு ஈடாக வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு ஈடு செய்யும் விடுப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட எங்கள் கோரிக்கையை கனிவோடு பரிசீலனை செய்து உரிய செயல் முறைகளையும் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
ஆ.இராமு,
மாநிலத்தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA
7373761517
இடம் சென்னை
தேதி:20.05.24
நகல்
மதிப்பிற்குரிய
ஜெ.குமரகுருபரன் இஆப அவர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
தலைமைச் செயலகம்,
சென்னை 9 .
மதிப்புமிகு
முனைவர் க. அறிவொளி அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்குநர்,
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சென்னை 6.
மதிப்பிற்குரிய தமிழ்நாடு பள்ளிக்கல்வி
இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை 6.
மதிப்பிற்குரிய தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை 6.
No comments:
Post a Comment