பொறுப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு - தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 25.05.2024 - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 25 May 2024

பொறுப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு - தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 25.05.2024

Responsive Ads Here
css
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

Regd. 758/2000

மாநிலக் கழகம்

நிறுவனத் தலைமுனைவர் அ.மாயவன்

25.05.2024

பொறுப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு

அன்புடையீர்,

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

1. கோடை விடுமுறையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் /தமிழாசிரியர்கள் ஆகியோரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்திட பள்ளிகளுக்கு தினமும் வருகைதர வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் (SPD)ஆணை பிறப்பித்தார்.

2. பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்களின் கோடை விடுமுறையை பறிக்கும் வகையில் போடப்பட்ட இந்த நியாயமற்ற ஆணையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அந்த ஆமாளயத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி, நமது சங்கம் SPD, பள்ளிக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை, வாட்ஸ் அப் மூலமும் ஒரு சிலருக்கு நேரிலும் அளித்தோம்- என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான்.

3. மதிப்புமிகு SPD அவர்கள், MP தேர்தல் பணிக்காக வெளி மாநிலத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மே மாத இறுதி வாரத்தில் தான் சென்னைக்கு வருவார் என்ற பதில் பட்டும், SPD அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது. மொத்தத்தில் நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

4 ஆசிரியர் பணி ஆண்டு தோறும் கோடை விடுமுறையை கட்டாயமாக வழங்கும் கல்வித்துறையை சேர்ந்தது என்பதால் கோடை விடுமுறை என்பது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். அதைப் பறிக்கவோ, நிராகரிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதாய் நமது சங்கம் நமது உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்தது. அதாவது மதிப்புமிகு SPD அவர்களின் ஆணை எங்களின் அடிப்படை உரிமையை பறிமுதல் செய்வதால் கோடையில், சிறப்பு வகுப்புகள் நடத்திட நாங்கள் பள்ளிக்களுக்குச் செல்ல மாட்டோம் என்று அறிவித்து விட்டு உங்களுடைய பிற பணிகளை கவனியுங்கள் என்றும்; இதற்காக மதிப்புமிகு SPD அவர்கள் உங்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை முறியடித்து உங்களை முழுமையாக பாதுகாக்க வேண்டிய மகத்தான பணியை நமது சங்கம் மேற்கொண்டு உங்களைப் பாதுகாக்கும் என்றும் யாரும் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என்றும் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். சங்கத்தின் இந்த வேண்டுகோளை நீங்களும் நிறைவேற்றவில்லை என்பதை மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறோம்.

5. விதிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பள்ளிக்கல்வித்துறை -இந்த கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. நமது ஆசிரியர்களும் பல கஷ்டங்களுக்கு இடையில் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

6 நமது மாநிலப் பொறுப்பாளர்கள் - மதிப்புமிகு SPD அவர்களையும், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர், முதன்மைச் செயலர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் மிக விரைவில் சந்தித்து கீழ்காணும் இரண்டு கோரிக்கைகளையும், இன்னும் பல முக்கிய கோரிக்கைகளையும் முன் வைக்க முடிவெடுத்துள்ளோம்.

முதல் கோரிக்கை

1. இந்த (2024) ஆண்டு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் எத்தனை நாட்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தினார்களோ அத்தனை நாட்களுக்கும் தவறாமல் E.L. ஈட்டிய விடுப்பு) வழங்கிட வேண்டுகிறோம்.

2. இனிவரும் கோடை விடுமுறையில் எக்காரணங்களை முன்னிட்டும், ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad