பொங்கல் பரிசுத்தொகுப்பு என்னென்ன? அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படுகிறது. இதோடு ஒரு முழு கரும்பும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.249.76 கோடி செலவு ஆகும்.
இலவச வேட்டி சேலைகள் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment