Polytechnic - Improving Student Enrollment - Creating Awareness in Government Schools - Director Letter - பாலிடெக்னிக் - மாணவியர் சேர்க்கையை மேம்படுத்துதல் - அரசு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் - Director Letter
பள்ளிக் கல்வி - பாலிடெக்னிக் கல்லூரிகள் - 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கையை மேம்படுத்துதல் - அரசு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் - அனுமதி அளித்தல் - தொடர்பாக!
பொருள்: பள்ளிக் கல்வி -பாலிடெக்னிக் கல்லூரிகள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணவியர் மேம்படுத்துதல் சேர்க்கையை அரசு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்- அனுமதி அளித்தல் - தொடர்பாக
பார்வை: 1.தொழில் நுட்பக் கல்வி ஆணையரது கடித எண்.944/ஐ-1/2025 г.10,01,2025
2.முதல்வர், டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை-113 கடித 6.0060/513/2025-21,01,2025
பார்வை 1ல் காணும் கடிதத்தில் தொழில் நுட்பக் கல்வி ஆணையரது கடிதத்தில் பெண்களின் (மேம்பாட்டிற்காக) உயர் தொழில் நுட்பக் கல்வியும் மற்றும் தொழில் முனைவு பயிற்சிகளை வழங்கும் முக்கிய பங்கேற்பாளராக 1962-ல் துவங்கப்பட்ட பழமையான சென்னை தரமணியில் அமைந்துள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது என்றும் இக்கல்லூரியின் 2025-2026 கல்வியாண்டின் மாணவியர் சேர்க்கை அதிகரித்தல் தொடர்பாக அரசு உயர்நிலை மற்றும் அதை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளிகளுக்கு சென்று கானொளிக் காட்சி மூலமாக ஏற்படுத்த கேட்கப்பட்டுள்ளது. எனவே மாணவியர் சேர்க்கை அதிகரித்தல் தொடர்பாக அரசு உயர்நிலை மற்றும் அதை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளிகளுக்கு சென்று கானொளிக் காட்சி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களை அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment