*DRPGTA 23.01.25*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*மாநில அளவில் +1,+2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதலிரண்டு இடங்களில் ஈரோடு மாவட்டம் உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முதுகலை ஆசிரியர்களிடம் விதிமுறைகளுக்கு முரணாக பேசிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்* .
*ஆசிரியர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு, மரியாதை,கண்ணியத்தோடு பேச ஆலோசனை வழங்க வேண்டும்*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*பதிவு எண் 239/2017*
அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
பெறுநர்:-
*மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்* *தலைமைச் செயலகம்*
*சென்னை -9*
ஐயா,
பொருள்:-மாநில அளவில் +1,+2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதலிரண்டு இடங்களில் ஈரோடு மாவட்டம் உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முதுகலை ஆசிரியர்களிடம் விதிமுறைகளுக்கு முரணாக பேசிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்* .
*ஆசிரியர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு, மரியாதை,கண்ணியத்தோடு பேச ஆலோசனை வழங்க வேண்டுதல் சார்பு*
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை +1,+2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிரண்டு இடங்களில் உள்ளது. அந்த அளவு ஈரோடு மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக கற்றல் கற்பித்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 22.01.2025 புதன்கிழமை ஈரோட்டில் முதுகலை ஆசிரியர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி சதவீத பகுப்பாய்வுக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்று உள்ளது.
இதில் மதிப்பிற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அவருக்குரிய கடமை, அதிகாரத்தின்படி ஆசிரியர்களை நியாயமான முறையில் ஆசிரியர்களுக்குரிய மரியாதை, மதிப்பு கொடுத்து உரிய வினாக்களை கேட்கலாம்.
மாநில அளவில் பொதுத்தேர்வுகளில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை பெற உரிய வழிகாட்டுதல்களை உரிய ஆலோசனைகளை வழங்கலாம்.
அதை வரவேற்கிறோம்.
ஆனால் இதற்கு முரணாக முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் பேசும்போது கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை ஒவ்வொரு முதுகலை ஆசிரியரிடமும் .
நீ ,வா ,போ என ஒருமையிலேயே அழைத்து பேசி மரியாதை கொடுக்காமல் பேசி உள்ளார்.
கல்லூரிகளில் இளநிலை முதுநிலை, பிஎட், எம்எட், எம்ஃ பில், முனைவர் பட்டம் என குறைந்தபட்சம் ஆறாண்டுகளும் அதிகபட்சம் 8, 10 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்று,
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை நேற்றைய கூட்டத்தில்
நீ ஆசிரியர் பணிக்கு *UNFIT* என்று பல ஆசிரியர்களை மிகுந்த மன அழுத்தம் ஏற்படும்படி பேசி உள்ளார்.
மேலும் ஆசிரியர்களை கூட்டத்தில் மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார்,
மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாணவர்களின் தேர்ச்சி வீதத்தோடு தொடர்பு படுத்தி பேசி உள்ளார்,
குறிப்பாக நீங்கள் அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு தேர்ச்சி சதவீதம் கொடுத்தீர்களோ அவ்வளவு தான் சம்பளம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
மேலும் கூட்டத்தில் ஆசிரியர்களை 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ட்ரான்ஸ்பரில் மாற்றி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்
மேலும் 17 B சார்ஜ் போட்டு உங்களை நிம்மதியாக ரிட்டையர்டு ஆக விடாமல் அலைய விட்டு விடுவேன்
என்று கடுமையாக மிரட்டி உள்ளார் .
இது ஒட்டு மொத்த ஈரோடு மாவட்டம் முதுகலை ஆசிரியர்களிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தற்செயல் விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
இது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும், மறுப்பதாகவும் அமைந்துள்ளது.
மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களோடு தொடர்பு படுத்தி பேசுவது உள்ளிட்ட விதிமுறைகளுக்கு முரணான பல பேச்சுக்களை நேற்றைய அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி சதவீத பகுப்பாய்வுக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பேசி உள்ளார்கள்.
இது ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களிடையே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அடுத்த வாரத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
எனவே ஈரோடு மாவட்ட ஆசிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கும்,
மன அழுத்தத்திற்கும் ஆளாக்கி,
அவர்களுடைய தன்மானம் பாதிக்கப்படுகிற அளவில் பேசி வரும் மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நினைத்த நேரத்தில் அடிக்கடி தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு கூட்டம் என்று சொல்லி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து மாவட்ட அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு பெரும் இடர்பாடு ஏற்படுகிறது.
எனவே தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்களை மட்டும் அழைக்க வேண்டும் .
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபடும் வகையில் அவர்களை இந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பகுப்பாய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரின் அவர்களின் தலையீடும் கல்வித்துறையில் மிகவும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.
எனவே அதனையும் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே ஈரோடு மாவட்ட முதுகலை ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்கவும்,
ஆசிரியர்கள் கூட்டத்தில் விதிமுறைகளுக்கு முரணாக பேசிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
----------------
செ.இரவிசங்கர்
மாநிலப் பொதுச்செயலாளர்
DRPGTA
------------------------
பா.தியாகராஜன்
மாநிலப் பொருளாளர்
DRPGTA
----------------------
இல.இரமேஷ்
மாநில அமைப்புச் செயலாளர்
DRPGTA
--------------------
முனைவர் சோ.கா.கண்ணன்
மாநில சட்டச் செயலாளர்
----------------------
க.பிரகாஷ்
மாநில பிரச்சார செயலாளர்
DRPGTA
---------------------
சு.சீனிவாசன்
மாநில தலைமையிட செயலாளர்
DRPGTA
----------------------
க.பட்டம்மாள்
மாநில மகளிரணி செயலாளர்
DRPGTA
-----------------------
மாநில தகவல் தொடர்பு செயலாளர்கள்
வை.விஜயன்
கோ.சிவக்குமார்
ஆ.செல்வம்
-----------------------
மாநில செய்தித் தொடர்பாளர்கள்
ம.சரவணன்
ப.இராஜேந்திரன்
மு.நாகராஜன்
-----------------------
மாநில அரசு உதவி பெறும் பள்ளிகள் செயலாளர்
சை.பிரேம்தாஸ்
------------------------
மாநிலத் துணைத்தலைவர்கள்
மா .அங்கமுத்து
ச.ஜெய்சங்கர்
இரா. ஜெயபிரகாஷ்
ந.பொன்னுசாமி
K. முத்துராஜ்
ச.பிச்சைமணி
-------------------------
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள்
D.தனசேகரன்
இரா.பிரபாகரன்
V.K.செந்தில்குமார்
--------------------------
மாநில அமைப்பு
DRPGTA
-------------------------
சென்னை
23.01.25
நகல்
மாண்புமிகு
தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு 1.
பெருமதிப்பிற்குரிய
திருமதி சோ.மதுமதி இஆப அவர்கள்,
அரசு செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச்செயலகம், சென்னை 9.
நேர்மைமிகு
தமிழ்நாடு
பள்ளிக்கல்வி இயக்குநர்
முனைவர் ச.கண்ணப்பன்
அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்குநரகம்,
சென்னை. 6.
மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்
திரு இராமசாமி அவர்கள்,
கண்காணிப்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்..
No comments:
Post a Comment