94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் -2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! Issue of the authority order for the payment of salaries for the month of December-2024 for 94 vocational education teacher posts!
பார்வை
தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1 தற்காலிக பணியிடங்கள்- டிசம்பர் 2024-ம் மாதத்திற்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக.
1 அரசாணை (நிலை) எண். 358, பள்ளிக் கல்வித் துறை. நாள். 18.08.1997.
2 அரசு கடித (நிலை) எண். 221, பள்ளிக் கல்வித் (வி.இ) துறை, Thoir. 15.07.1999.
அரசாணை (2டி) எண். 46, பள்ளிக் கல்வித் (வி.இ) துறை, நாள். 12.09.2006.
அரசாணை (நிலை) எண். 69. பள்ளிக் கல்வித் துறை, நாள். 20.03.2007.
அரசாணை (1டி) எண். 245, பள்ளிக் கல்வித் (ப.க.7(1)) துறை, நாள். 10.12.2021.
பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண். 036847/எல்/ இ3/2022, நாள். 03.10.2022.
7 அரசு கடித எண்.efile/3630/ப.க.7(1)/2024, நாள்.10.05.2024.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்.036847/எல்/ இ3/2022, நாள். 20.11.2024.
பார்வை 1 முதல் 3 வரையுள்ள அரசாணைகள் மற்றும் கடிதத்தின்படி தோற்றுவிக்கப்பட்ட 680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-2 பணியிடங்கள், பார்வை-4-இல் கண்ட அரசாணையின்படி தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களாக தரமுயர்த்தப்பட்டன.
மேற்கண்ட பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் போக மீதமுள்ள 115 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களுக்கு பார்வை 5-இல் கண்ட அரசாணையின்படி 01.10.2021 முதல் 30.09.2022 வரை ஓராண்டிற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 115 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களில் ஓய்வு பெற்ற 21 பணியிடங்கள் போக மீதமுள்ள 94 பணியிடங்களுக்கு 01.10.2022 முதல் 31.12.2022 வரை 3 மாதங்களுக்கு துறைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஊதியம் பெற அனுமதிக்கப்பட்டது. பார்வை 7-இல் கண்ட அரசுக் கடித்தின்படி ஜூன் 2024 முதல் நவம்பர்-2024 வரை ஆறு மாதத்திற்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வழங்கப்பட்டது. 2. பார்வை 8-60 காணும் கடிதத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர், மேற்கண்ட பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்புக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, அரசின் பரிசீலனையில் இருப்பதால், தற்போது டிசம்பர் 2024 முதல் மே-2025 வரை ஆறு மாதத்திற்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார்.
3. மேற்காண் நிலையில், அரசாணை (டி) எண். 271, நிதி (சிஎம்பிசி) துறை, நாள்.18.08.2022-ன்படி அமைக்கப்பட்ட குழுவின் 09.02.2024-ம் நாளிட்ட கூட்ட அறிக்கையின் அடிப்படையில், ஒருங்கிணைந்த ஒரே அரசாணையாக வெளியிட சற்று காலதாமதாகும் என்பதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 94 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களுக்கு டிசம்பர் 2024-ம் மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதியக் கொடுப்பாணை (Pay authorization) வழங்கி அரசு ஆணையிடுகிறது. மேற்கண்ட பணியிடங்களுக்கு டிசம்பர் 2024-ம் மாதத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக்கொண்டு ஊதியம்பெற அனுமதிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
4. இக்கடிதம் நிதித்துறையின் நிதித்துறையின் அ.சா.எண்.efile/11298/பக7(1)/2024, நாள்.31.12.2024-இல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது
94 POST Pay Authorization December Month -2024
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment