தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.10ல் தர்ணா - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 5 February 2025

தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.10ல் தர்ணா

Responsive Ads Here
அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.10ல் தர்ணா

தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பிப். 10ல் அரசு ஊழியர் சங் கத்தினர் மாவட்ட தலைந கரங்களில் 24 மணி நேரம் தர்ணா நடத்துகின்றனர்.

தமிழக அரசு ஊழி யர்களுக்கான புதிய ஓய் வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல் படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத் தும் நிரப்பப்படும் என பல்வேறு கோரிக்கைகள் தி.மு.க., தரப்பில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப் பட்டது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை கடந் தும் அரசு ஊழியர்களுக் கான வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு துறை ஊழியர் சங்கத்தின ரும் தொடர்ந்து போராட் டங்கள் நடத்தி வருகின் றனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா கூறியதாவது: சி.பி.எஸ்., திட்டம் ரத்து, அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலிப்ப ணியிடங்களை நிரப்புதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப் படுத்து வேண்டும், சத் துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி பிப்.10ல் மாநி லம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் 24 மணி நேர தர்ணா நடத்தப்பட வுள்ளது என்றார்.

IMG_20250203_145118

No comments:

Post a Comment

Post Top Ad