மாணவர்களின் கற்றல் திறன் கொள்ளளவை ஆய்வு செய்யத் தவறிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - AIFETO...04.02.2025. - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 4 February 2025

மாணவர்களின் கற்றல் திறன் கொள்ளளவை ஆய்வு செய்யத் தவறிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - AIFETO...04.02.2025.



*மாணவர்களின் கற்றல் திறன் கொள்ளளவை ஆய்வு செய்யத் தவறிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை...*

*சொன்னதை செய்யும் பள்ளிக்கல்வித்துறை; சொல்லாததையும் செய்யும் தொடக்கக்கல்வித்துறை; எதையும் கண்டு கொள்ளாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்.*

*AIFETO...04.02.2025.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்:- 36/ 2001*

*ASER அறிக்கையில் தமிழ்நாடு பீகாரை விட பின்னடைவை சந்தித்து இருக்கிறது.. என்று சில கட்சித் தலைவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க தெரியவில்லை என்று அறிக்கை விடுகிறார்கள்.*

*இதற்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குகிறார்கள். 12 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் நியமனம் தமிழ்நாட்டில் நடைபெறவே இல்லை. மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியம்... வேலை பார்த்த நாட்களுக்கு மட்டும்தான் ஊதியம் என தினக்கூலி ஆசிரியர்களாக மாற்றி வருகிறார்கள்.*
*ஈராசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் தான் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. எந்த ஆசிரியர்களும் அன்றாடம் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதிக்காத பள்ளிக்கல்வித்துறை... ஊராட்சி ஒன்றிய அதிகார காலத்தில் குடும்ப கட்டுப்பாடு/ சிறுசேமிப்பு போன்ற பணிகளில் ஆசிரியர்களை ஈடு படுத்திய போது கண்ட பணியை கொடுக்காதே!... கற்பித்தல் பணியை கெடுக்காதே!... என்று கோரிக்கை முழக்கம் எழுப்பினோம்.*

*விளம்பரத்திற்காகவும், புள்ளி விவரத்திற்காகவும் புதுப்புது பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது.*

*ASER அறிக்கையில் இப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் வராமல் என்ன செய்யும். சரி அது போகட்டும்!.. எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனுக்கு இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் SLAS தேர்வு முதல் நாள் மாலை வினாத்தாள் பெற்றுக்கொள்ள வேண்டுமாம்.. அல்லது காலையில் பெற்று செல்ல வேண்டுமாம்...*

*கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேர்வினை நடத்துகிறார்களாம். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 35 கேள்விகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு நீட் தேர்வை போல மூன்று விதமான வினாத்தாள்கள் மூன்று பாடத்திற்கும் மூன்று வகையான வினாத்தாள்கள் இரண்டாம் வகுப்பில் இருந்தும் வினாக்கள் இருக்குமாம்.. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்க கூடியவர்கள் பத்தியை படித்து புரிந்து கொள்வதற்கே சிரமப்படும் அவர்களால் ஆங்கிலம், தமிழ் படித்துப் பார்த்து எங்கிருந்து எழுதுவார்கள் எப்படி எழுதுவார்கள்.*

*தேசியக் கல்விக் கொள்கை மூன்றாம் வகுப்பிற்கு தேர்வில் இருந்து விலக்களித்துள்ளார்கள். ஆனால் மூன்றாம் வகுப்புக்கு SLAS நடத்த வேண்டும்.*

*ஏற்கனவே மூன்று மாதிரி தேர்வுகள் நடைபெற்று உள்ளது. ஐந்தாம் வகுப்பிற்கு 45 வினாக்கள் இருக்கிறது. எட்டாம் வகுப்பிற்கு 50 கேள்விகள் கேட்டுள்ளார்கள்.*

*சுற்றறிக்கை அனுப்பி உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பள்ளிக் கல்வித்துறை அந்த வினாத்தாள்களை தயாரித்த எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்து ஆசிரியர் இல்லாத தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் இந்த வினாத் தாளை வைத்து நீட் தேர்வு போல எப்படி இந்த தேர்வினை எழுதுவார்கள். என்பதை சிந்திக்க வேண்டாமா?.*
*ஏசர் (ASER ) தேர்வு அறிக்கையை விட இந்த SLAS தேர்வு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதன் உள்நோக்கம் எண்ணும் எழுத்தும் திட்டம் நடத்தி பயனில்லை. ஆறாம் வகுப்பிற்கும் எண்ணும் எழுத்துத் திட்டத்தினை தொடரலாம்... புத்தகத்தை அச்சடிக்கலாம்... நிர்வாகம் தான் வணிக நோக்கோடு செயல்படுகிறது என்றால் பள்ளிக் கல்வித் துறையும் வணிக நோக்கத்தோடு செயல்படலாமா ?*

*வேதனையின் முழு விவரத்தினை மீடியாக்களை அழைத்து தெரிவித்திட உள்ளோம். ஏசர் (ASER) அறிக்கை தேர்வை விட SLAS தேர்வு முடிவு மோசமாக வந்தால் அதற்கான காரணம் கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே காரணமாக இருக்கும். கற்பித்தல் கொள்ளளவை அறியாத பள்ளிக்கல்வித்துறை...*

*SLAS பற்றிய முழு விவரங்களையும் ஊடகங்கள்/ பத்திரிகையாளர்களை கூட்டி தெரிவித்திட உள்ளோம்...*

*04.02.2025 அன்று நடைபெறும் SLAS தேர்வில் மூன்றாம் வகுப்புக்கு 35 வினாக்கள், 05.02.2025 அன்று ஐந்தாம் வகுப்புக்கு 45 வினாக்கள், 06.02. 2025 அன்று எட்டாம் வகுப்புக்கு 50 வினாக்கள் என்ற அடிப்படையில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.*

*இந்த நிலைமையே நீடித்தால் கல்வி சிறந்த தமிழ்நாடு கேள்விக்குறியாகும். உண்மைத் தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளியிடுவோம். பாடம் நடத்துவது பள்ளி ஆசிரியர்கள் தேர்வு நடத்துவது பயிலும் கல்லூரி மாணவர்கள் வரவேற்று ஏற்பாட்டுகளை செய்து கொடுப்பது தலைமையாசிரியர் பணி. தொடர்ந்து ஆசிரியர்களுக்கு அழுத்தத்தையும், குருநிந்தனையினையும் செய்து வரும் பள்ளிக் கல்வித்துறையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. விடியலை ஏற்படுத்துவோம்..! ஏற்படுத்துவோம்..! மாணவர்களின் சாபம் சும்மா விடாது..!*

*ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்,*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here